Showing 193–208 of 1501 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்தியா என்றால் என்ன ? / India Endral Enna ?

    90 84
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்தியாவின் இருண்ட காலம் / Indiavin Erunda Kaalam

    500 465
    பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன . அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள் . ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன .
    சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக் கிறது . ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது .
    தவிரவும் , காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங் களையும் தகர்த்தெறிகிறது . பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி , ரயில்வே , நாடாளுமன்ற ஜனநாயகம் , சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார் .
    பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம் . நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது .
    ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதல் களையும் பெற்றிருக்கும் An Era of Darkness நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திர குமாரி / Indira Kumari

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திர நீலம் / Indira Neelam

    150 140
    அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து காமம் , அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணிக்கிறது .
    இதிகாச காலந்தொட்டு , நவீன காலம் வரையான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற தேடலே இந்திர நீலத்தின் கதைகள் .
    விடுபட்ட , நிறைவேறாத , தோற்றுப்போன காதலையும் காமத்தை யும் பேசுகின்றன இக்கதைகள் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்துத்வ இயக்க வரலாறு / Hinduthuva Iyakka Varalaru

    999 929
    இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் , மதச்சக்தியாகத் திகழும் இந்துத்வத்தின் வரலாறு .
    இந்துத்வ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது . திலகர் , சாவர்க்கர் , ஹெட்கேவார் . கோல்வால்கர் , சியாமா பிரசாத் முகர்ஜி , தீனதயாள் உபாத்யாயா , வாஜ்பாய் , அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது .
    இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர , அவசியத் தேவை . அதனை உணர்ந்து , சிப்பாய் புரட்சி , இந்து மகா சபாவின் ஆரம்பம் , ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய் , இந்தியப் பிரிவினை , ஜனசங்கத்தின் உருவாக்கம் , எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள் , ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம் , பாஜக உருவான கதை . ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம் .
    காந்தி படுகொலை , காமராஜர் கொலைமுயற்சி , மீனாட்சிபுரம் மதமாற்றம் , மண்டைக்காடு கலவரம் , ரத யாத்திரை , பாபர் மசூதி இடிப்பு , பொடா சட்டம் , கோத்ரா ரயில் எரிப்பு , குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம் . இந்துத்வ அரசியலின் எழுச்சி , வீழ்ச்சி , மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது .
    இந்திய , தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர் . முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது .
    தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான அயோத்தி … ஆர்.எஸ்.எஸ் .. இந்துத்வா தொடரின் நூல் வடிவம் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனி எல்லாமே நீயல்லவோ / Ini Ellamay Nee Allavo

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனி எல்லாம் சுகமே / Iniyellam Sugamey

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இனிப்பு தேசம் / Inippu Dhesam

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இன்றைய இந்தியா / Indraiya India

    700 651
    ஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத் . இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் . எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர் . இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது .
    இந்த நூலுக்குப் பலவகைச் சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு . ஒன்று இந்த நூல் அக்காலத்தில் ஒவ்வொரு போராளி கையிலும் திகழ்ந்தது . இந்தியா அல்லாத வேறு பல நாடுகளில் பணியாற்றிவந்த விடுதலை இயக்கங்களுக்கும் இது ஓரளவு வழிகாட்டி நூலாகவும் இருந்தது . மற்றொன்று இந்திய வரலாற்றை மக்கள் வரலாறாகக் காணவேண்டும் என்னும் கோட்பாட்டுக்கு அடிக்கல் நாட்டியது . நாடு விடுதலை பெற்ற அறுபதாண்டுகளில் பொருளாதார , சமூக ஆய்வு நூல்கள் எண்ணிறந்தவை வெளிவந்துள்ளன . அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக , வழிகாட்டியாக விளங்குவது இந்நூல் .