Showing all 3 results
-
Read more
தமிழில் சுயசரித்திரங்கள் / Tamizhil Suyasarithirangal
₹290₹270சுயசரித்திரம் என்பது ஒருவர் தன் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தானே எழுதுவது . பலர் தன் வாழ்க்கைச் சரித்திரம் எழுதக்கூடியது இல்லை என்று எழுதாமல் மறைந்து போய்விடுகிறார்கள் . வெகு சிலர் தன் வாழ்க்கை எழுதக்கூடியது என்று எழுதியிருக்கிறார்கள் . அவற்றைப் படித்துப் பலர் அவர்களின் சாதனைகளை , நற்பண்புகளை , உயர்ந்த விதத்தை அறிந்துகொண்டு பின்பற்றி வாழ முயல்கிறார்கள் .இந்தியாவிலேயே முதன்முதலாக சுயசரித்திரம் மொழியில்தான் எழுதப்பட்டது . எழுதியவர் துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை . 1736 ஆம் ஆண்டில் டைரியாகத் தன் சுயசரித்திரத்தை இருபத்து நான்கு ஆண்டுகள் எழுதினார் . அது இருநூற்றி ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அச்சு ஏறியது .தமிழ்க் கவிஞர்கள் , எழுத்தாளர்கள் , அரசியல் தலைவர்கள் , சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று பலரும் சுயசரித்திரம் எழுதியிருக்கிறார்கள் . அவற்றில் இருந்து ஆனந்தரங்கப் பிள்ளை , வ.உ.சிதம்பரம் பிள்ளை , உ.வே. சாமிநாதையர் , பாரதியார் , நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை , தி.சே.சௌ. ராஜன் , சுத்தானந்த பாரதியார் , ம.பொ. சிவஞான கிராமணியார் , நெ.து. சுந்தர வடிவேலு , மு . கருணாநிதி , ஜெயகாந்தன் ஆகியோர் எழுதியுள்ள சுயசரித்திரங்களை அறிமுகப்படுத்துகிறது இந்நூல் ,சா . கந்தசாமி : ஐம்பதாண்டுகளாகத் தமிழில் நாவல் , சிறுகதைகள் , விமர்சனக் கட்டுரைகள் எழுதும் படைப்பு எழுத்தாளர் . ஆவணப்படங்கள் , குறும்படங்கள் , இயக்குநர் தயாரிப்பாளர் . 1998 ஆம் ஆண்டு ‘ விசாரணைக் கமிஷன் ‘ நாவலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . 2007 ஆம் ஆண்டில் தமிழக அரசின் ‘ கலைமாமணி ‘ விருது பெற்றவர் . ‘ சாயாவனம் ‘ உட்பட பதினோறு நாவல்களும் , 250 சிறுகதைகளும் எழுதியுள்ளார் . இவருடைய 9 கட்டுரைகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன .