Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    புரட்சிக்காலம் / Puratchikaalam

    110 102
    1934 ம் ஆண்டில் பிறந்த பிரஃபுல்லராய் “ ஜீகாந்தர் ” வங்காளிப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார் . பின்னர் “ சம்வாத் பிரதின் ” பத்திரிகையிலும் பணிபுரிந்தார் . இவர் நாடுமுழுவதும் பெரும்பாலும் கால் நடையாகவே . சுற்றி மக்களின் வாழ்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறார் . 100 க்கு மேற்பட்ட நாவல்கள் . சுமார் 150 சிறுகதைகள் , 10 சிறுவர் கதை , கட்டுரைத் தொகுப்புகள் இயற்றியுள்ளார் . இவருடைய படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளன ; பல விருதுகள் பெற்றுள்ளன .
    நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாத இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு போராளி போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு , அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஒரு முன்னாள் சம்ஸ்தான மன்னனின் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டு அதில் உள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு தங்கியிருக்கிறான் . அந்தவீட்டு மருமகள் அவனை எப்படி சமாளிக்கிறாள் என்பதைச் சுவையாக சொல்லும் இந்த நாவலில் முக்கிய பாத்திரங்களின் உணர்ச்சிகளின் சித்தரிப்போடு நாட்டின் அரசியல் நிலைமையும் விவாதிக்கப்படுகிறது .
    மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ( 1929 ) சில ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியபின் இந்திய அரசின் தணிக்கைத் துறையில் சேர்ந்தார் . உதவி இயக்குநராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் , ஆங்கிலம் , வங்காளி மொழிகளில் எழுதியும் , மொழிபெயர்த்தும் வருகிறார் . காஜி நாஸ்ருல் இஸ்லாம் . சரத்சந்திரர் , பிரேம்சந்த் , ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார் . சிலப்பதிகாரம் – ஆங்கில மொழிபெயர்ப்பு , திருக்குறள் – வங்க மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது படைப்புகளில் முக்கியமானவை . சாகித்திய அகாதெமி விருது ( 1977 ) பெற்ற இந்திரா பார்த்தசரதியின் ” குருதிப்புனல் ” நாவலை தமிழிலிருந்து வங்க மொழியில் “ ரக்தபன்யா ” என்று மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது 1991 – ல் இவருக்கு வழங்கப்பட்டது .