Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    நாய்சார் / Naaisir

    140 130
    மூற்றத்தில் , கூடத்தில் , தாழ்வாரத்தில் , திண்ணையில் விளைந்தவை என் கதைகள் . என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள் . சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது . என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள் . அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை .
    கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன் . பாதசாரிகளுக்குத் திண்ணைகள் தேவை . ஆசுவாசமாய் அமர்ந்து கொள்ளவோ , ஒரே நீட்டாய் நீட்டி விட்டுக் கொள்ளவோ திண்ணைகள் அவ்வளவு இதம் .
    இத்தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்கள் . கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு துளி வாஞ்சை அவர்கள்மேல் உண்டானால் அதுவே என் கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்வேன் .