Showing 161–176 of 1501 results
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
ஆழ்மனத்தின் அற்புத சக்தி / The Power of Your Subconscious Mind
₹199₹185டாக்டர் ஜோஸப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற நூலாசிரியர் . அவர் பல ஆண்டுகாலம் இந்தியாவில் தங்கியிருந்து நம்முடைய தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் . உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர் , நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது , அதைக் கொண்டு நம் வாழ்வை பிரமிக்கத்தக்க விதத்தில் நம்மால் மாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத முடிவிற்கு வந்தார் .உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் பல நிகழட்டும் !இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே மிகப் பரவலாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது . உலகெங்குமுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவியுள்ளது .நீங்கள் எந்தவொரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும் , எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து , அதை உங்கள் னத்திரையில் படமாகப் பதிய வைத்தால் , உங்களால் உங்கள் ஆழ்மனத் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும் .வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிரம்பியுள்ள இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய நடைமுறை உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களால் அளவற்ற செல்வத்தைக் குவிக்க முடியும் , நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வைப் பெற முடியும் , அனைவருடனும் இணக்கமான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் , உங்களது திருமண பந்தத்தை என்றென்றும் இனிமையாக வைத்திருக்க முடியும் . உங்களிடம் உறைந்திருக்கும் அர்த்தமற்ற பயங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும் , ஒவ்வொரு வைகறையிலும் உங்களால் புத்துணர்ச்சியுடன் துயிலெழ முடியும் , வேண்டாத விருந்தாளிகளாய் உங்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எல்லா உடல் உபாதைகளையும் விரட்டியடிக்க முடியும் .டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ள , வாழ்வில் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய எளிய உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களுக்கும் உங்கள் மாபெரும் கனவிற்கும் குறுக்கே நிற்கும் மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உங்களாலும் வெற்றிநடை போட முடியும் . -
SAVE 7%
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி / Beyond the Power of Your Subconscious Mind
₹295₹274டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழ்மன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை . 1963 ல் ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து , ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன . அதோடு , இன்று நாம் வாழும் இவ்வுலகம் , சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது .டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து , ‘ ஆழ்மனத்தின் அற்புத சக்தி ‘ என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே ‘ புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது ‘ என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிக்கொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன் . இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்த போது , இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன் . இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல் .திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன் . இதன் மூல நூலில் இடம்பெற்றிராத ‘ எப்படிச் செய்ய வேண்டும் ‘ என்பது போன்ற விஷயங்களையும் நான் இந்நூலில் சேர்த்திருக்கிறேன் . – முன்னுரையில் ஜேம்ஸ் ஜென்சன் -
SAVE 7%
-
SAVE 7%
ஆஸாதி / Aacaati
₹275₹256ஆஸாதி ! -சுதந்திரம் கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது . கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து , அந்த மாநிலம் முடங்கியது.தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் . இணையத் தொடர்பு துண்டிக்கப் பட்டது . மீண்டும் கஷ்மீர் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் . கீழ் வந்தது . போராட்டம் . அடக்குமுறை , வன்முறை , உயிரிழப்புகள் , இடப்பெயர்வுகள் …. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது , பாசிச அரசின் செயல்திட்டம் தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியிருந்தது . திடீரென்று வீதிகள் அமைதியாகின , நடமாட்டங்கள் அனைத்தும் முடங்கின . கோவிட் -19 அச்சுறுத்தல் நவீன உலகை ஸ்தம்பிக்க வைத்தது . பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் பெருந்தொற்று புதிய உலகிற்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது . உலகை மறுகற்பனை செய்துபார்ப்பதற்கான வாய்ப்பை அது வழங்கியிருக்கிறது என்கிறார் அருந்ததி ராய் . வலுப்பெற்றுவரும் எதேச்சாதிகாரச் சூழலில் சுதந்திரம் என்பதன் பொருள் . என்ன என்று சிந்திக்கும்படி இந்தக் கட்டுரைகள் நம்மைத் தூண்டுகின்றன . நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் மொழியின் பங்கு என்ன , துயரார்ந்த இன்றைய சூழலில் புனைவுக்கும் மாற்றுக் கற்பனைகளுக்குமான இடம் எது என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரைகள் . எழுப்புகின்றன .
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%