Showing 1329–1344 of 1501 results
-
Read more
ராஜராஜ சோழன் / Rajaraja Chozhan
₹150₹140ராஜராஜ சோழனின் ஆட்சி , பொற்காலம் என்று அழைக்கப் படுகிறது . வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத் தவராக கொண்டாடப்படும் அதே சமயம் , மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவு கூரப்படுகிறார் .கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை , மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன . ஆனால் , எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும் , படை வலிமையையும் அவர் பயன்படுத்த வில்லை . போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு , மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார் . எளியோருக்குக் கடன் வழங்கினார் .ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல , மக்கள் நலப் பணிகளும் அதிகம் . மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது . காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது . கலை , ஆட்சி முறை , சமயம் , இலக்கியம் , பொருளாதாரம் , பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம் . அந்த வகையில் , தென்னிந்தியாவில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான் .ச.ந. கண்ணனின் இந்தப் புத்தகம் , பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை , அதன் சமூக , அரசியல் முக்கியத்துவத்தை விரிவாக ஆராய்கிறது . -
Read more
ராஜவனம் / Rajavanam
₹70₹65வாழ்வின் சுவாரஸ்யமே , தெரியாததைத் தெரிந்து கொள்வதும் , புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே ! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது . இந்த உலகமே ஒரு குடும்பம் ; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர் , வனம் , நதி , மலையோடு விலங்குகள் , மரம் , செடி கொடிகள் , பறவை , பட்சிகளென தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து , அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது . இப்பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய்த் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும் .ஆர் . என் . ஜோ டி குருஸ் -
Read more
ரிக் வேத கால ஆரியர்கள் / Rick Vethakala Aariyargal
₹220₹205ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பாவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலில் அலசியுள்ளார் .நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலில் ஆரியர்கள் இந்தியா வந்தபிறகு ரிக் வேதம் பிறந்தது . ஆரியர்கள் மதுவருந்தியது , மாமிசம் உண்டது . அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன . ஆரியர்களின் குல கோத்திரங்கள் , அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை , கல்வி கற்கும் முறை , நோய் தீர்க்கும் மருத்துவம் , ஆடை அணிகலன்கள் , பொழுதுபோக்கு , இசை , நடனம் , நாட்டியம் , சூதாட்டம் , வணங்கிய தெய்வம் , அவர்களின் வேளாண்மை , வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன .