Showing 1233–1248 of 1501 results

  • SAVE 7%

    மானசரோவர் / Maanacaroovar

    250 233
    பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘ மானசரோவர் ‘ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும் . நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை , போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல் , விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது . பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது . ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக , ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது . இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது . நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது .
    அரவிந்தன்
    Read more
  • SAVE 7%

    மானாவாரி மனிதர்கள் / Manavari Manithargal

    150 140

    இன்றைய அறிவியல் வளர்ச்சியில் , பிரபஞ்சவெளியில் பிற கோள்களை ஆராய்ச்சி செய்கிறான் மனிதன் . இந்த பூமியில் மணிதகுணம் வாழ்வதற்குத் தண்ணீரும் , உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட இது பொருத்தும் சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக் கருத்தை கொங்கு கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன் , இந்த மானாவாரி மனிதர்களில் இவர் கூறியுள்ள தண்ணீர்ப் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது . மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது .. மூக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது . அமரர் அகிலன் நினைவு நாவல் விருதும் , ஆண்டின் சிறந்த நாயலுக்கான இலக்கியச் சிந்தனை விருதும் இதற்கு எளிய அங்கீகாரங்களே . மக்கள் இலக்கியத்தில் இந்த நாவல் மணிவிளக்காக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பதே மகத்தான விருது .

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் / Maamallapuram Pulikkukayum Kirushna Mantapamum

    225 209
    உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப் புலிக்குகை
    எத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள இச்சின்னம் , சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோயில் என்பதையும்
    கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த சிற்பத்தொகுதி
    சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல் .
    Read more
  • SAVE 7%

    மாயாஜாலம் / The Magic

    350 326

    கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித நூலில் புதைந்து கிடந்த வார்த்தைகள் , அதைப் படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும் , குழப்பமூட்டுவதாகவும் , முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது . அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும் , நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே அறிந்து வைத்திருந்தனர் . மாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில் , ரோன்டா பைர்ன் , வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார் . இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் . நீங்கள் யாராக இருந்தாலும் சரி , நீங்கள் எங்கிருந்தாலும் சரி , உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி , இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது .

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    மீட்புகள் / Meetpukal

    120 112
    உறவுகளுக்கு அழிவு ஏற்படும் இந் நிகழ் காலத்தில் ஒரு தந்தைக்கும் மகனுக்குமிடையே அமைந்த பிரியா உறவின் வெதுவெதுப்பு இங்கு நாவலாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது . வாழ்க்கைப் பயணத்தின் முதற்சுற்றில் மகனுக்கு தந்தையும் , பின்னர் தந்தைக்கு மகனும் உடனிருந்து ஆறுதல் தருகின்றனர் . இவர்கள் வழியெங்கும் வெளிச்சமாகத் திகழும் தாய் எனும் ஜோதியும் .
    ஹரிஹரன் பங்காரப்பிள்ளி
    இந் நாவல் ஒரு பாடப் புத்தகம் . மிகவும் சிக்கலான வாழ்க்கை சூழ்நிலைகளிலும் தாய் – தந்தையை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் பாதுகாவலாக திகழும் ஒரு பச்சை மனிதன் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் . பாரம்பரிய சொத்துக்களோ பொருள்வளத்தின் சக்தியோ இல்லையெனிலும் தனித்துப் போராடி வாழ்க்கையில் கரையேறிவிட முடியும் என்ற திடத்தை உருவாக்கும் புத்தகம் .
    உமா பிரேமன்
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%