ஒரு புது உலகம் : ஜெயோஜித் சாட்டர்ஜி , அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிகிறான் . விவாகரத்தான ஓர் ஆண்டு கழித்து , ஏழுவயது மகன் போனியுடன் கல்கத்தாவிற்கு வருகிறான் பெற்றோருடன் விடுமுறையைக் கழிக்க . ஆறுமாதம் அம்மாவுடனும் ஆறுமாதம் அப்பாவுடனும் வசிக்கவேண்டிய நிலையில் மகன் .
கடந்தகாலத்திலும் , நிகழ்காலத்திலும் மாறிமாறிப் பயணிக்கும் ஜெயோஜித்தின் நினைவோட்டங்கள் ; மகனின் , பேரனின் எதிர்காலம் குறித்தச் சிந்தனையில் பெற்றோரது மனவோட்டங்கள் என்று புது உலகம் விரிகிறது , மெல்ல , மெல்ல .
ஆழமாகவும் , மென்மையாகவும் எழுதப்பட்டுள்ள நாவல் . நம்பிக்கைகள் , விருப்பங்கள் , வருத்தங்களால் நிரம்பியிருக்கும் ஒரு குடும்பத்தின் இதயத்தைத் தெளிவாக , உயிர்ப்புடன் படம்பிடிக்கிறது .
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன . பழமையான பண்பாட்டு விதிமுறைகள் , புதிய தேவைகள் , திருமணம் , தாய்மை , காதல் , கல்வி , பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச்சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன . எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன . இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது .
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர் . இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயனது . இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார் . யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க விடுகிறார் . கதைகளை எழுதவல்லவராக மினிர்கிறார் . மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து தனது கதையலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும் , படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு காட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும் , பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே காாததிக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன் . ‘ ஓளிரும் பிரகாசிக்கட்டும் பச்சைக் கண்கள் புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி . மொழியும் படைப்பாளனும் – அகரமுதல்வன்