Showing 1441–1456 of 1501 results
-
Read more
வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் / Veyil Dhesathil Velliyargal
₹250₹233இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக , நாட்குறிப்புகளாக , கடிதங்களாக , அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள் . அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன . அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன் .ஆங்கிலேயர்களின் வாழ்வை , அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல் .ஆங்கிலேயர்களைப் பற்றி தமது பாடப் புத்தகங்களில் , பொதுப் பத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும் . -
Read more
வெற்றி நிச்சயம் / Vetri Nichayam
₹222₹206உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் வெற்றியாளர் ஆக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்திருக்கும் மந்திரகோல் இது . மாய விளக்கும் கூட . இருந்தாலும் மூடத்தனமாக மந்திர தந்திரங்களின் மேல் நம்பிக்கை வைக்காமல் உங்களை நம்பி முன்னேறுவதற்கே இதைப் பயன்படுத்துங்கள் . உள்ளுக்குள் ஆற்றல் இல்லாத மனிதன் என்று யாரும் கிடையாது . ஆனால் அப்படி ஒரு சக்தி உங்களுக்குள் இருக்கிறது என்பதையே நீங்கள் உணராமல் இருக்கலாம் . கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நீங்கள் அலைய வேண்டியதில்லை .உங்களிடம் உள்ள ஆற்றல்தான் வெண்ணெய் . உங்களுக்கு வெற்றி என்ற நெய் தேவைப்படுகிறது . வெண்ணெயை எப்படி நெய்யாக மாற்ற வேண்டும் என்கிற வழிமுறை மட்டும் தெரிந்து விட்டால் நீங்கள் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறீர்கள் . இதனால் உங்களது வெற்றி உங்கள் மடியின் மீது வந்து விழும் . ஆகவே உங்களைப் போல உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வெற்றிக்கான வழி என்ன என்பதைக் கற்றுக் கொடுத்து விட்டால் அதன்பின் நீங்கள் வானத்தையே வில்லாக வளைப்பீர்கள் .பாதையைப் போட்டுக் கொடுத்து விட்டால் அதில் பயணம் செய்வது எளிது . அப்படியொரு பாதையை அமைக்கும் முயற்சிதான் இந்தப் புத்தகம் . -
Read more
வெள்ளையானை / Vellaiyyaanai
₹500₹465உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம் . ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் . மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே . நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும் .இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது . எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் .ஜெயமோகன்