ரப்பர் வளையல்கள் ‘ , 19 சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு . உண்மை சம்பவங்களிலி ருந்தும் . உண்மைச் சம்பவங்களின் போது நடந்த கிளைக்கதைகள் , வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடந்த கதைகளாக மனிதர்களின் குணம் சார்ந்த , உணர்வுகள் சார்ந்த நட்பு , அன்பு , காதல் , நம்பிக்கை , ஏற்றத்தாழ்வு , துரோகம் , உதவி , ஏக்கம் , எதிர்பார்ப்பு , நகர்ப்புற , கிராமப்புற கதைகள் என பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையைப் பற்றி எழுதப்பட்டுள்ளது .
காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன . பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன . உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல் . ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே .