Showing 1489–1501 of 1501 results
-
Read more
ஸ்ரீமுகன் / Sri Mugan
₹450₹419பாரத நாட்டை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருக் கின்றன . ஒவ்வொரு அரச வம்சமும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒளி வீசியிருக்கிறது . அதே போல அரசர்கள் பெரும் புகழடைந் திருக்கிறார்கள் . இராமாயண காலம் தொட்டு சமீபகாலம் வரை இந்த உண்மையை வரலாறுகளின் மூலம் நாம் அறிந்து கொள் கிறோம் . அவற்றில் சாதவாகன அரச வம்சமும் ஒன்று . இவர்களை ஆந்திரர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் . மௌரியப் பேரரசரான அசோகரின் காலத்தில் அவரது அரசுப் பிரதிநிதிகளாகவும் ஊழியர்களாகவும் தக்காண தேசத்தில் ( South India ) பல அரச வம்சங்கள் இருந்தன . அவற்றில் ஒன்றான ஆந்திரர்களை சிமுகன் என்பவன் அசோகரது மறைவிற்குப் பிறகு ராஜவம்சமாக உயர்த்தி அதற்கு சாதவாகனர் என்று நாம காரணம் சூட்டி சுதந்திர ஆட்சிக்கு வழிவகுத்தான் . மத்திய இந்தியாவில் ஆரம்பித்து தமிழகத்தின் வட எல்லை வரை இவனது சாதவாகனப் பேரரசு பரந்து கிடந்தது . அக்கால கட்டத்தில் சாதவாகனர் பேரரசை உருவாக்கிய சிமுகன் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த காலகட்டத்தில் ஒளிவீசினான் . ஆயினும் இவனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எதையும் குறிப்பிடவில்லை . ஆரம்பத்தில் சிங்கமாய் எழுந்துச் சீறிய சிமுகன் தன் ஆட்சியின் கடைசி காலத்தில் முட்டாளைப் போல நடந்து கொண்டான் என்ற ஒரு வரித் தகவலை மட்டுமே இவனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார் கள் . சமான வரலாறு சரிவர விவரிக்காத போது அக்குறையை நிறைவு செய்வது வரலாற்று நாவலாசிரியர்கள் . அந்தப் பணியைத் தான் இந்த நாவலில் நானும் செய்திருக்கிறேன் . வித்தியாச மன்னனை இந்த நாவலில் நீங்கள் சந்திப்பீர்கள் . இந்த நாவலைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய போது ரோமாபுரியில் இருந்த அடிமைகளைப் பற்றி அதுவும் குறிப்பாக அதை பெண் அடிமைகளைப் பற்றி வியத்தகு விவரங்கள் கிடைத்தன . இவற்றைக் கொண்டு தனியாக நாவல் ஒன்றை எழுதத்தான் நினைத்தேன் . பிறகு இந்த நாவலிலேயே இணைப்பதற்கானச் சாத்தியக் கூறுகள் இருந்ததால் ணைத்தேன் . அவை சுவையானவை . பிரமிப்பைத் தரக் கூடியவை . இதுவரை சரித்திர நாவல்களில் வெளிவராத வியப்பூட்டும் தகவல்களை இந்த நூலில் நீங்கள் காணலாம் . களிக்கலாம் . இந்த அடிமை வாழ்வியல் பற்றி பல்வேறு தகவல்களைத் தந்து பேருதவி புரிந்தவர் பேராசிரியர் . திரு . கேசவன் ஆவார் . அவருக்கு என் நன்றி உரித்தாகும் . இந்த நூலில் காதல் இருக்கிறது . வீரம் இருக்கிறது . அடிமைத் தனம் இருக்கிறது . அரசியல் இருக்கிறது . வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் இருக்கின்றன . உங்கள் ரசனைக்கேற்ற எல்லாமும் உண்டு . இந்த நூலின் கதா பாத்திரங்களான ஸ்ரீமுகன் , கிருஷ்ணன் , டயானா , சோமசேனர் , மார்க்கஸ் , புரூட்டஸ் , சில்வியா , ஆகியோர் உங்களை நிச்சயமாகக் கவருவார்கள் . . இந்நூல் அன்போடும் அழகோடும் வெளியிட்டுள்ள சீதைப் பதிப்பகத்தாருக்கு என் உள்ளங்கலந்த நன்றி . வழக்கம் போல் இந்த நூலும் பகவான் ரமணரின் அருளால் தான் வெளியாகிறது . அவரது அருளே இந்த எழுத்துக்கள் . மற்றபடி என்னால் ஆவது எதுவுமில்லை .உதயணன் . -
Read more
ஹைக்கூ பூங்கா / Haikko Poonga
₹120₹112பூங்காவிற்குள் நீங்கள் செல்லும் போது மலர்கள் மேல் விழும் பனித்துளிகள் உங்கள் மீதும் விழும் என்பதில் ஆச்சரியமில்லை . சமுதாயச் சீர்திருத்த கருத்துக்களையும் , இளைஞர் முன்னேற்றப் பார்வை கொண்ட கவிதைகளாய் பூத்திருக்கும் .
-
Read more
இந்தியாவில் சாதிகள் / Indiavil Sathigal
₹160₹149உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது . தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது . சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது . தேசிய இனத்தை உருவாக்க முடியாது . ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது . சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் .