சீனாவுக்கான வணிகப் பாதையில் இருப்பதால் எப்பொழுதுமே வணிக முக்கியத்துவத்துடன் இருக்கும் தென் கிழக்காசிய நாடு இந்தோனேசியா . பதினோறாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் மேலாதிக்கம் செய்த மண்ணிலேயே , 18 – ஆம் நூற்றாண்டில் கூலிகளாகத் தமிழர்கள் வாழ நேர்ந்த அவலம் நிகழ்ந்த தேசம் .
சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு , சிறை வைக்கப்பட்டிருந்த நாடு . கலையெழில் நிரம்பிய இந்து , பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு . ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாறாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல் , ‘ யானைகளின் கடைசி தேசம் . ‘ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு.ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள் , வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால் , பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன .
கிறிஸ்தவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு , இழிவுபடுத்தப்பட்டு , தண்டிக்கப்பட்டு , அடிமைப் படுத்தப்பட்டு , வியாபாரமாக்கப்பட்டுள்ள இயேசுவை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து அவருக்கு மீட்பு வழங்கி , சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் , எல்லா மக்களின் அன்பும் , அரவணைப்பும் , முத்தங்களும் அவருக்குக் கிடைக்கவும் பால் சக்காரியா போன்ற இலக்கியவாதிகள் , வேறு சமய நம்பிக்கையாளர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும்