Showing 1281–1296 of 1501 results
-
Read more
மேற்கத்திய ஓவியங்கள் / Merkathiya Oviyangal
₹975₹907ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ . நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது , பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள் வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார் . ” தியடோர் பாஸ்கரன் , ‘ தி இந்து ‘ நாளிதழில் மேற்கத்திய ஓவியங்கள் முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது . நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி . என்பவை பற்றியும் சுருக்கமாக , ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் . பி.ஏ. கிருஷ்ணன் இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன . இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைலகற்களாக அமையும் என்பது உறுதி
-
Read more
மேற்கத்திய ஓவியங்கள் 1 / Merkathiya Oviyangal 1
₹1,350₹1,256மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது . இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது , உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர் , அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் . வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது . அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது , பற்பல ஓவிய மேதைகள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறார்கள் . குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஓவியர்களுடன் முடியும் முதல் பாகம் 160 பல வண்ண ஓவியங்களுடன் மிக அழகான முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .