Showing 1265–1280 of 1501 results
-
Read more
முற்கால இந்தியா / Murkala India
₹850₹791இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும் , இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல ; சகிப்புத் தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது . இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று .எரிக் ஹாப்ஸ்வாம் -
Read more
மூச்சே நறுமணமானால் / Mooche Naarumanamanal
₹225₹209பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல . குரல் , ஒலி , கவித்துவம் . மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை . மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய் , அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய் , பரந்து விரிந்த வானாய் . இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த் துலங்கி மிளிர்கிறது .
-
Read more
மெட்ராஸ் 1726 / Medraas 1726
₹250₹233காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன . அரசியல் , வணிகம் , வாழ்வியல் , சமயம் , சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன . இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு , சமூக அமைப்பு , ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது . மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள் , தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள் , கடைவீதிகள் , ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள் , ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு , பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் , உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது .பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார் . கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன . இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது . -
Read more
மெர்சோ மறுவிசாரணை / Merso Maruvisaranai
₹195₹181“ ஆல்பெர் காம்யு எழுதிய ‘ அந்நியன் ’ நாவலின் தொடர்ச்சியாகவும் , அதன் மறுபக்கமாகவும் , எதிரொலியாகவும் அமைந்திருக்கும் ‘ மெர்சோ : மறுவிசாரணை ’ ‘ அந்நியன் ’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு .அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின் துணிச்சலும் , சவாலும் , இவரிடம் காணப்படும் பிரெஞ்சு மொழி ஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன ; இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாக இருந்திருக்கின்றன . ”