Showing 1217–1232 of 1501 results
-
Read more
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் / Maraikkappatta Mirutankac Cirpikal
₹195₹181ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது ? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள் ? பசு , ஆடு , எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து , ஒத்திசைவுடன் வினையாற்றி , ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது ? ஓசையை உருவாக்குவது யார் ? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவ திலில்லை . தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார் . அது வெறும் ஓசை அல்ல , வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு . வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது . வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது , இழுப்பது , திருகுவது , உடைப்பது , நசுக்குவது , கழுவுவது , வெட்டுவது , இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார் . மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல , அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும் , உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர் . இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார் . அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார் . அறிகிறார் , உணர்கிறார் . அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது .
-
Read more
மற்ற நகரம் / Mattra Nagaram
₹240₹223தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான் . அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது . நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில் , நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி . இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம் . நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம் . பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன . இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம் .நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது . -
Read more
மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu
₹170₹158மலை மேல் நெருப்பு ( Fire on the Mountain ) 1978 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல் . கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம் . இந்தக் கதாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய் நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை , அதனால் நந்தா கவுலுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன . நந்தா கவுலின் தோழி ஈலா தாசின் தோற்றம் எளிமையான . சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது .அனிதா தேசாய் 1937 இல் பிறந்தவர் . அவருடைய தந்தை வங்காளத்தைச் சேர்ந்தவர் . தாயார் ஜெர்மன் . அனிதா தேசாய் தில்லியில் கல்வி கற்றார் . தெளிவான பகல்போது ‘ . ‘ கட்டுப்பாட்டு நிலையில் ‘ , ‘ விருந்தும் உபவாசமும் ‘ , ‘ மாலை நேர விளையாட்டு ‘ , ‘ கடலோரக் கிராமம் ‘ , ‘ பாம்கார்ட்னரின் பம்பாய் நகரம் ‘ முதலியன இவர் எழுதிய நூல்கள் . சாகித்திய அகாதெமியின் ஆங்கில ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் , இலண்டன் நகரின் இலக்கியத்துக்கான அரசுக் கழகத்தின் சிறப்பு அங்கத்தினராகவும் அவர் பணியாற்றி உள்ளார் .இந்நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ள அசோகமித்திரன் , ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுத்துத் துறையில் சிறந்து விளங்கியவர் . அவரது கதைகளில் ஒரு சிறிய விவரத்தைக்கூட நுட்பமாக , முழுமையாகக் காணமுடியும் . நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார நிலையை , அவர்களின் இயலாமையை மிகையில்லாமல் காட்டியவர் . -
Read more
மாண்புமிகு விவசாயிகள் / Manbumigu Vivasayigal
₹177₹165உழவுத் தொழில் நொடிந்த நிலையில் , ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட சூழலில் , செயற்கையான உரங்களாலும் , பூச்சிக் கொல்லிகளாலும் மண்ணே மலடான தருணத்தில் – ஒரு மீட்பர் போல , ஒரு தேவதை போலத் தோன்றி , அந்தப் பிரதேசத்துக்கே புத்துயிர் கொடுத்த உழவர்களின் அசாதாரணக் கதைகளே இந்தப் புத்தகம் .இந்த மண் மீதும் , மனிதர்கள் மீதும் கொண்ட அக்கறையினால் இயற்கை விவசாயத்தை நம்பிக் களமிறங்கி , அவமானங்களைப் புறக்கணித்து , தோல்விகளை விழுங்கி நிமிர்ந்து , நின்று போராடி , பசுமையை மீட்டெடுத்து வென்ற எளிய , வலிய மனிதர்கள்தாம் இவர்கள் . தாம் இயங்கும் சமூகத்தையும் இயற்கை விவசாயத்தின் வழியில் கைதூக்கிவிட்ட வயக்காட்டுப் போராளிகள் . நம் மண்ணில் மட்டுமல்ல – தேசங்கள் தோறும் , கண்டங்கள் தோறும் அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இயற்கை விவசாயிகளை இங்கே சந்திக்கலாம் .இயற்கையோடு இணைந்த இவர்களது வெற்றி , பசுமையான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் மிச்சம் வைக்கிறது . நாளைக்கும் நம் சந்ததிக்கும் நல்ல , ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்ற ஆசையைத் தக்க வைக்கிறது . மாற்றம் , நம் மனத்தில் இருந்துதான் உண்டாக வேண்டும் என்ற பேருண்மையை உரக்கச் சொல்கிறது .இந்த மாண்புமிகு விவசாயிகள் நம் மனத்தில் உண்டாக்கப் போகும் மாற்றம் மகத்தானது !