Showing 1185–1200 of 1501 results
-
Read more
மண்பாரம் / Manbaaram
₹270₹251இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள் … ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் . அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை . அது மேல்ஜாதியினரின் , மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை ; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை ; மனித மரியாதை இல்லாத வாழ்க்கை . இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதை யாக்குகிறார் . அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை ; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார் .இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள் , இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை . அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை . அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது . கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு . கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல , அலங்காரம் இல்லாமலே 99 கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன . -
Read more
மதாம் / Madhaam
₹400₹372இந்திய தாய்க்கும் , ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர் மதாம் . பிரெஞ்சிந்திய கம்பெனியின் கவர்னராக 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த துயூப்ளேவின் மனைவி . பிரெஞ்சிந்தியாவின் நிழல் ஆட்சியாளராகக் கோலோச்சியவர் .மதாம் செய்த லஞ்ச லாவண்யங்களாலும் , ஏசுசபை பாதிரிகளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட மதநடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளும் வாய்ப்பு பறிபோனது . ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியதற்கு மதாம் . ஒருவிதத்தில் காரணமானார் .துயூப்ளே கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்கியதில் தொடங்கி , பதவி பறிபோய் , குற்றவாளியாகப் பிரான்சுக்குக் கப்பலில் ஏற்றப்படும் வரையிலான காலத்தை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன் -
Read more
மந்திரவாதியின் சீடன் / Manthiravathiyin seedan
₹350₹326அப்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பவியாகி , அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பளிவெளிகள் , மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயனாமாக இந்த நாவல் விரிகிறது . குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் . பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது . பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புளைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன . தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்பொருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும் . . ” மத்திரவாதியின் சீடன் ‘ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல் , இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது . துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன . விநோதமான மனிதர்கள் , ஞானிகள் , வியப்பூட்டும் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான , சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் குழ்ந்துகொள்கிறது .ஜி- குப்புசாமி
-
Read more
மனவாசம் / Manavasam
₹165₹153வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை .உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன் . மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா ? ‘ சுயசரிதம் ‘ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை . கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன் .இந்த மனவாசம் 1961- ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது . இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன் .நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல் . நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன் .என்னைப் பிறரும் கெடுத்து , நானும் கெடுத்துக்கொண்ட பிறகு , மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள் .இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் … எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் … ?