Showing 273–288 of 1501 results
-
Read more
உயிர்ச்சொல் / Uyirchol
₹200₹186உயிர்ச்சொல் ‘ நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது . ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து , வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி , அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது . பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது . உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது . கபிலன் வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இந்தப் படைப்பு . ‘ இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது ‘ என்பது கபிலனின் கருத்து .கவிதை , சிறுகதை , நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும் , நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன் வைரமுத்துவை பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம் .‘ உயிர்ச்சொல் கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது நாவல் . -
Read more
உருள் பெருந்தேர் / Urul Perunther
₹225₹209பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள்.வாழ்க்கையை தொகுத்துப் பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன .வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம் . இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப் பதிவாகவும் ஆக்குகின்றன .– ஜெயமோகன் -
Read more
உலக இலக்கிய பேருரைகள் / Ulaga Ilakkiya Peruraigal
₹325₹302ஹோமர் , ஷேக்ஸ்பியர் , டால்ஸ்டாய் . தஸ்தாயெவ்ஸ்கி , ஹெமிங்வே , பாஷோ , ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை . மறக்கமுடியாதவை . அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல் . ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.