Showing 177–192 of 1501 results
-
Read more
இது கறுப்பர்களின் காலம் / Idhu Karuppargalin Kaalam
₹125₹116நாங்கள் இன்னும் தொடப்படாத முரசுகளை செவிப்பறை கிழிய அடித்து நொறுக்குவோம் . காலத்தின் இருட்குகை சுவர்களில் எங்கள் சொற்களைப் பொறிப்போம் . வரலாற்றினுள் எங்களை நாங்களே எழுதுவோம்
-
Read more
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் / Intha Kulathil Kalerinthavargal
₹200₹186சலனங்கள் மறைவதில்லை . தன்னை உருவாக்கிய , உயர்த்திய , பாதித்த , பரவசப்படுத்திய மனிதர்களை , ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து .கலைஞரும் எம்.ஜி.ஆரும் ; சிவாஜியும் கண்ணதாசனும் ; பாரதிராஜாவும் இளையராஜாவும் ; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறு அறிமுகம் ஆகும் போது , நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது . பெரிய மனிதர்கள் , சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது .வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது ; ஆழமானது ; உணர்ச்சிபூர்வமானது . அந்த உறவின் வலிமையை , ஆனந்தத்தை , அர்த்தத்தை , பரவசத்தை , பூரிப்பை , வலியை , வேதனையை , வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் .நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது . -
Read more
இந்திய வானம் / Indhiya Vaanam
₹240₹223பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை . இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன . அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு . நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது . அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பதில்லை . தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை . மனிதர்களை , அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம் .