1998 ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜூத் . 2008 ஆம் ஆண்டு , குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடம் , ‘ உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப் போகிறாய் ‘ என தந்தை சொல் கிறார் . ஈர்க்கத்தக்க , விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது . ஒட்டுமொத்த உலகமும் அவளின் தோள்மேல் இறங்கியது போன்று இருந்தது . சில நாட்களுக்குப் பிறகு அவசரமாக திருமணம் நடந்தது . சிறுமி நுஜூத் , தனது எல்லா வலிமையையும் சேகரித்து அவளுடைய பரிதாபமான விதியிலிருந்து தப்பிக்க முயன்றாள் …
– டெல்ஃபின் மினோவி ‘
பெண் ஏன் அடிமையானாள் ? ‘ என்று பெரியார் எழுதிய நூலுடன் , பெண்களுக்கு அன்பளிக்கத் தகுதியான ஒரு நூல் இது . விடுதலை முழக்கங்களை விட பாதிக்கப்பட்டு சுய எழுச்சியால் மீண்டவர்களின் , விடுதலையடைந்தவர்களின் குரல் களுக்கிருக்கும் வலிமை எவரையும் ஆழமாகத் தொடக்கூடியது .
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில் , ‘ மணிக்கொடி ’ முதல் ‘ எழுச்சி ’ வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது . பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்திரண்டு சிறுகதைகள் , இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம் பெறுகின்றன .
எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே , இம்முழுத் தொகுப்பு . லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும் , ‘ பரிசோதனை எழுத்தாளராகவும் ’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல் ,