Showing 305–320 of 1501 results
-
Read more
எண்பதுகளின் தமிழ் சினிமா / Enbathugalin Tamil Cinema
₹150₹140தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முக்கிய காலக்கட்டமான 1980 களை மையமாக்கி முன்னும் பின்னுமாகச் சென்று விரிந்த பின்புலத்திலிருந்து முக்கியமான அம்சங்களை இனங்கண்டு ஆராய்கிறது இந்நூல் . மரபான நம்பிக்கைகளும் நவீனகால மாற்றங்களும் சந்தித்தபோது சமூகப்பரப்பில் ஏற்பட்ட ஊடாட்டங்களை திரைப்படங்கள் தனக்குரிய வணிகச்சட்டத்திற்குட்பட்டு பிரதிபலித்ததை அதன் ` உள்மெய் ‘ யிலிருந்து விலக்கி எடுத்து இந்நூல் விவாதிக்கிறது . தமிழ் சினிமாக்களில் சாதியும் ஒடுக்கப்பட்டோரும் புறக்கணிக்கப்பட்டனர் என்ற இதுநாள் வரையிலான பார்வையை சற்றே தலைகீழாக்கி தமிழ்ச்சினிமா கதையாடல் எப்போதும் ஒடுக்கப்பட்டோரையே சார்ந்து இயங்கி வந்திருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது .
-
Read more
எதிர்ப்பிலேயே வாழுங்கள் / Ethirpillaye Vazhungal
₹190₹177ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன் , அவரை அழைத்து , ” உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது . நீ அதை எப்படி வாழப் போகிறாய் ? ” என்று கேட்டான் .இதைக் கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார் , “ எப்பொழுதும் வாழ்வது போல – கணத்துக்கு கணம் ! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது . ஆகவே எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? இதில் எந்த வித்தியாசமும் இல்லை . நான் எப்போதுமே கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால் , இந்தக் கணமே எனக்கு அதிகம்தான் . 24 மணி நேரம் என்பது எனக்கு மிக அதிகம் ; இந்த ஒரு கணமே போதும் ! ” . -
Read more
எனதருமை டால்ஸ்டாய் / Enatharumai Tolstoy
₹100₹93உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதும் , அவற்றைப் பற்றிப் பேசுவதும் , எழுதுவதும் ஒரு அற்புதக்கலை . மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும் . தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் . க.நா.சு.வுக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக் களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார் . உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ள இக்கட்டுரைகள் மகத்தான படைப்பாளியின் வாழ்வுபற்றியும் படைப்பின் உள்ளடுக்குகள் பற்றியும் ஒருசேர அறியத் தருகிறது என்பதே இந்த நூலின் புதுமையாகும் .
-
Read more
எனது ஆண்கள் / Enathu Aangal
₹190₹177பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா , அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் . மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார் . ‘ எனது ஆண்கள் ‘ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது . பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார் . இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல ; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும் .
-
Read more
எனது பயணம் / My Journey
₹195₹181சின்னஞ்சிறு தீவான ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நம் நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராக உருவான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையானது , அசாதாரணமான மன உறுதி , அபாரமான தைரியம் , அயராத விடாமுயற்சி , செய்கின்ற ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஆகியவற்றைப் படிக்கற்களாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகின்றது .இப்புத்தகத்தில் டாக்டர் கலாம் அவர்கள் , தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஆசுவாசமாக நின்று திரும்பிப் பார்த்து உணர்ச்சிபூர்வமாக அசை போடுகிறார் . அவை ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் எவ்வாறு பெரும் தாக்கத்தை விளைவித்தன என்பதை வாசகர்களோடு அவர் பகிர்ந்து இருந்தபோதும் கொள்கிறார் . தான் சிறுவனாக வளர்ந்தபோதும் வாலிபனாக தாக்கத்தை தனது வாழ்க்கையில் ஆழமான ஏற்படுத்திய நபர்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பற்றியும் அவர் இதில் எடுத்துரைக்கிறார் . ஆழ்ந்த தெய்வ பக்தியுடன் இருந்த தனது தந்தையார் , அன்பே உருவான தனது தாயார் , தனது கண்ணோட்டத்தையும் தனது சிந்தனையையும் செதுக்கிய வழிகாட்டிகள் போன்ற , தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைத்து அன்புள்ளங்களையும் அவர் இதில் அவர் இதில் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறார் .சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் , பூரணமானதாக விளங்கும் டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அழகான பாடங்கள் இந்நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன .