ஆழ்ந்த அறிவு , சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு , தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை , அசாத்தியமான ஆசிரியத்துவம் , ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம் . ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள் , போக்குகள் , நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது . நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள் , அதிலுள்ள அறச்சிக்கல்கள் , அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன . தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம் . நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி , மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம் . ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது .
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல . குரல் , ஒலி , கவித்துவம் . மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை . மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய் , அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய் , பரந்து விரிந்த வானாய் . இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த் துலங்கி மிளிர்கிறது .
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன . அரசியல் , வணிகம் , வாழ்வியல் , சமயம் , சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன . இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு , சமூக அமைப்பு , ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது . மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள் , தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள் , கடைவீதிகள் , ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள் , ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு , பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் , உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது .
பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார் . கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன . இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது .
ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ . நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது , பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள் வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார் . ” தியடோர் பாஸ்கரன் , ‘ தி இந்து ‘ நாளிதழில் மேற்கத்திய ஓவியங்கள் முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது . நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி . என்பவை பற்றியும் சுருக்கமாக , ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் . பி.ஏ. கிருஷ்ணன் இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன . இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைலகற்களாக அமையும் என்பது உறுதி
மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது . இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது , உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர் , அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் . வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது . அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது , பற்பல ஓவிய மேதைகள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறார்கள் . குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஓவியர்களுடன் முடியும் முதல் பாகம் 160 பல வண்ண ஓவியங்களுடன் மிக அழகான முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வட்சியம் பாரதியும் . இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெருசபை போராட்டக் கட்டமான சுநேசி இயக்கத்தின் சூழந்தைவர் ஒே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகயே வெளிச்சத்திற்கு வந்தவர்கள் , 1800 இல் தொடங்கி மறையம்வரை இருவருக்குமிடையே ஆவணப்படுத்துகிறது இந்நூல் . உர்ச்சிப்பாங்கானதொரு நட்பு வளர்ந்து செழித்தது . அந்தக் காவிய பை பாரதியைப் பற்றி உட்.சி , எழுதிய நினைவுக் குறிப்புகளையம் , வட்சியைப் பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகள் , கவிதைகள் , நூல் மதிப்புரைகள் , கருத்துப்படங்கள் , விளம்பாங்கள் முதலானவற்றையும் இந்நூல் கொண்டுள்ளது . தமிழ் எழுத்து , சீர்திருக்கம் பற்றி வசிக்கும் பாரதிக்கும் இடையே நடைபெற்ற டானதொரு விவாதமும் முழுமையாக நூலாக்கம் பெறுகின்றது . இருவரின் நட்பையும் , ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன . அக்கால் வரணற்றையும் ஒருங்கே விளக்ரிக்காட்டும் வேறு பலட இவற்றை நேர்த்தியாகத் தேடித தொகுத்துள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி இவற்றின் பின்னணியை விளக்கும் பதிப்புரையை எழுதியுள்ளார் ,
காம்யூ ( கமுய் ) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம் , மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அவற்றிலிருந்து விடுபடக் கையாளும் உத்திகளையும் உளவியல் பார்வையில் அணுகுகிறது . தான் இழைத்த தவறுக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் ஒருவன் அதற்கான தண்டனையினைக் கோருவதையும் தன்னையே நீதிபதியாகப் பாவித்து சுய விசாரணை செய்வதையும் புதியதொரு கோணத்தில் அலசும் படைப்பு இது . மனித மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட இப்புதினத்தில் வரலாற்று நிகழ்வுகள் , சமயம் , சமூக அமைப்புகள் , மனித இயல்புகள் எனப் பலவும் விவாதப்பொருளாகி நம் சிந்தனைவெளியினை விரிவாக்குகிறது . இதன் மூலம் ஆழமான வாசிப்பு அனுபவத்தையும் இப்புதினம் வழங்குகிறது .
வேதாளம் சொன்ன கதை ‘ யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் .
இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு . அவை சுவாரஸ்யமானவை ; எனினும் நேர்கோட்டில் நிகழாதவை . நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் . ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது . கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள் ; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள் . கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது . இயல்பானது என்று உணரும்போதே அதீதமாகும் மொழி . ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கு இட்டுச்செல்லும் எழுத்து வன்மை ,
மேற்சொன்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை , புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல் . அது என்ன என்ற கேள்விக்குப் பதிலே ‘ வேதாளம் சொல்லும் கதை , ‘