ப . சிங்காரத்தின் ‘ புயலிலே ஒரு தோணி ‘ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது .
ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல் . வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது . காரணம் அதன் படைப்பு வலு . ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு . இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம் .
வரலாற்று அடிப்படையிலும் ‘ புயலிலே ஒரு தோணி ‘ தனி இடத்தைப் பெறுகிறது . இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே .
புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘ புயலிலே ஒரு தோணி ‘ .
தென் ன் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை , படர்ந்து விரிகிறது இந்த நாவலில் . எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்து கிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை . படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா பாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் . சிதறுண்டுபோன , மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்களான நம்பியும் கண்ணனும் நுழைகிறார்கள் . மரணத்தின் மடியிலும் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல் .
It is epical but minus the constraints of an epic . .
The Hindu
Reminds one of Garcia Marquez’s ‘ One Hundred Years of Solitude ‘ .
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது . சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும் , ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது . கதைகளில் அவருடைய ஈடுபாடு , ஓட்டத்தின் லயம் , எழும் துடிப்பு , எல்லாம் அவருக்கே உரித்தானவை . படிக்கவேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப்புள்ள எழுத்தாளர் ஜயந்த் ,
கிரீஷ் கார்னாட்
புதிய களங்கள் , புதிய மாந்தர்கள் என எல்லா வகைகளிலும் புதியவற்றை நாடிச் செல்லும் விழைவுடையவர் ஜயந்த் காய்கிணி . கூடுவிட்டு கூடு பாய்வது போல ஒவ்வொரு கதையிலும் இவருடைய களங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன . எவ்விதமான முன்திட்டமும் இல்லாமல் எழும் இவருடைய கதைகள் மிகவும் இயல்பாக புதிய சூழல்களுடன் பொருந்திவிடுகின்றன . சாதாரணமாக ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டு போகிற போக்கில் எங்கோ ஒரு கணத்தில் வாழ்க்கையை மதிப்பிடும் ஒரு சொல் அல்லது ஒரு வரி அல்லது ஒரு காட்சி மிகவும் இயல்பான வகையில் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும் . அத்தகு கணங்கள் கதையின் வாசிப்பனுபவத்தைப் பல மடங்காகப் பெருக்கி மனத்தை நிறைக்கின்றன .
அப்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பவியாகி , அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பளிவெளிகள் , மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயனாமாக இந்த நாவல் விரிகிறது . குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் . பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது . பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புளைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன . தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்பொருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும் . . ” மத்திரவாதியின் சீடன் ‘ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல் , இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது . துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன . விநோதமான மனிதர்கள் , ஞானிகள் , வியப்பூட்டும் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான , சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் குழ்ந்துகொள்கிறது .ஜி- குப்புசாமி
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது ? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள் ? பசு , ஆடு , எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து , ஒத்திசைவுடன் வினையாற்றி , ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது ? ஓசையை உருவாக்குவது யார் ? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவ திலில்லை . தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார் . அது வெறும் ஓசை அல்ல , வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு . வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது . வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது , இழுப்பது , திருகுவது , உடைப்பது , நசுக்குவது , கழுவுவது , வெட்டுவது , இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார் . மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல , அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும் , உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர் . இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார் . அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார் . அறிகிறார் , உணர்கிறார் . அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது .
தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான் . அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது . நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில் , நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி . இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம் . நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம் . பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன . இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம் .
நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது .
பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘ மானசரோவர் ‘ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும் . நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை , போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல் , விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது . பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது . ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக , ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது . இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது . நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது .
உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப் புலிக்குகை
எத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள இச்சின்னம் , சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோயில் என்பதையும்
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த சிற்பத்தொகுதி
சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல் .