ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவ மான நாவல் ‘ பனி ‘ . சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல் களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது .
பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘ பனி ‘ . மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங் களுடனும் சொல்கிறது இந்த நாவல் .
தனது படைப்புகளின் நிரந்தரக் இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக் . ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘ கா’வின் அனுபவங்களே இதன் கதை . இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு .
மகாத்மாவும் மகாகவியும் 1919 இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர் . காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி , கட்டுரை , கவிதை , கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார் . தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி , பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘ யங் இந்தியா ‘ , ‘ நவஜீவன் ‘ இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார் ; பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார் . பாரதி பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார் … இந்த வரலாற்றை விரிவாகத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்திற்குக் கையளிக்கின்றது இந்நூல் .
துயரங்களும் சிக்கல்களும் நிறைத்திருக்கும்போது புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால் .. அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப் கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவ தர்களை நெறிப்படுத்த இன்னும் வல்லாம் வேண்டும் ? தொடர்ந்து இந்தக் கேள்விகளோடு வந்துகொண்டிருக்கின்றன சல்மாவின் புதிய கதைகள் !
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்தாவல் , அகதிகள் புகவிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு . சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை . அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது . அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்தாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது . நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது . நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல . படைப்பு என்ற நிலையிலும் ” பிராப்ளம்ஸ்கி விடுதி ‘ முற்றிலும் ஒரு புதிய முயற்சி.
புத்தம் வீடு ‘ எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல் .
லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள் . தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் . இறுதியில் இணைகிறார்கள் . முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்துபோகின்றன . இடங்கள் மாறுகின்றன . மனிதர்கள் கடந்து போகிறார்கள் . அவர்கள் உறவாடுகிறார்கள் . காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள் . பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல் கிறார்கள் . குலப்பெருமை பேசுகிறார்கள் . புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள் . காலத்துக்கேற்ப மாறுகிறார்கள் .
இது லிஸியின் கதை . மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள் . அவளை மையமாகக்கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை . ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள் .
படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘ புத்தம் வீடு ‘ . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது . எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது .