பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கிழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது . தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது . அதற்கேற்பட மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின . ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது . மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது . ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை , இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது . அந்தக் காலகட்டத்தில் , புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள் , தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும் , அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள் , தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும் , பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய் , பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும் , வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும் , ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல் .
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் , அயலகத்தில் வணிக முயற்சிகள் , அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல் , ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது . இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில் , இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும் , மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது . இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே . ஐதர் அலி , திப்பு கல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை ; பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும் , ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின . இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது , பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன . ஆயினும் , புதுச்சேரிப் காலனி வேட்டை முற்றுப்பெற்றது . பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர் , அத்துடன் ஃபிரான்சின் கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் , ஆட்சியரின் துணையுடன் இந்தியச் மந்தமாகவே தொடர்ந்தது . சமூகத்தின்மீது தொடுத்த உளவியல் , உடலியல் தாக்குதல்களால் , மதமாற்றம் சற்று இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும் , கையாண்ட உத்திகள் , கண்ட போர்க்களங்கள் , பாடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இந்நூல் பயணிக்கிறது . இயலாமை , போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள் , அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்களின் ஊடாக இந்நூல் பயணிக்கிறது.
மூன்று பெண்கள் , மூன்று தலைமுறைகள் , மூன்று உலகங்களைக் கோத்துப் பின்னப்பட்ட கதை இது . பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள் , ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது . மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை ; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஓப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை . அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது . எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்குத் தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும் , தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது . மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்குத் தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது . நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை . அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா ? இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல் ,
அம்பேத்கரின் நேர்மையை , சமூக நீதிக்கான இச்சையை , மனிதர்களைப் படிக்கும் கலையை , அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை , புலமையை , விவேகத்தை . மனிதநேயச் சமயக் கொள்கையை , எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் . அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும் . தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை . ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை . மாயைகளை உடைப்பவரை , நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில் , எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர் . அவரது மென்மையை , சாதி , மத , இன , பிரதேச , மொழி , பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவர் தரிசனத்தை , விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும் . அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம் .
ஆர் . ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘ குறுநாவல் ‘ என்னும் வரையறைக்குள் அடங்குபவை . அவற்றுள் ‘ அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு . பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘ அறுவடை’யை எழுதினார் . புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று . வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது . அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘ பெண் நோக்கு ‘ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது . அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது . இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும் .
ஆஸாதி ! -சுதந்திரம் கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது . கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து , அந்த மாநிலம் முடங்கியது.தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் . இணையத் தொடர்பு துண்டிக்கப் பட்டது . மீண்டும் கஷ்மீர் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் . கீழ் வந்தது . போராட்டம் . அடக்குமுறை , வன்முறை , உயிரிழப்புகள் , இடப்பெயர்வுகள் …. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது , பாசிச அரசின் செயல்திட்டம் தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியிருந்தது . திடீரென்று வீதிகள் அமைதியாகின , நடமாட்டங்கள் அனைத்தும் முடங்கின . கோவிட் -19 அச்சுறுத்தல் நவீன உலகை ஸ்தம்பிக்க வைத்தது . பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் பெருந்தொற்று புதிய உலகிற்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது . உலகை மறுகற்பனை செய்துபார்ப்பதற்கான வாய்ப்பை அது வழங்கியிருக்கிறது என்கிறார் அருந்ததி ராய் . வலுப்பெற்றுவரும் எதேச்சாதிகாரச் சூழலில் சுதந்திரம் என்பதன் பொருள் . என்ன என்று சிந்திக்கும்படி இந்தக் கட்டுரைகள் நம்மைத் தூண்டுகின்றன . நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் மொழியின் பங்கு என்ன , துயரார்ந்த இன்றைய சூழலில் புனைவுக்கும் மாற்றுக் கற்பனைகளுக்குமான இடம் எது என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரைகள் . எழுப்புகின்றன .