Showing 17–32 of 344 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792) / Irandaam Veeranayakkar Naatkurippu (1778-1792)

    395 367
    பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792 வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘ இரண்டாவது நயினார் ‘ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு , ஆந்திரம் , கர்நாடகம் , மகாராட்டிரம் , வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு , பகை , பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது .
    ஐதர் அலி ஆட்சி , திப்பு சுல்தான் ஆட்சி , பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம் , புதுவை மக்களின் எழுச்சி , தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு , ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘ இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ‘ .
    தி.நாச்சிமுத்து
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    இஸ்தான்புல் / Istanbul

    475 442
    நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் ‘ இஸ்தான்புல் ‘ . தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார் . இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூர்கிறார் . தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் . ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியகமாக மாற்றுகிறார் .
    ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல் மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்களமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது . தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார் . நெகிழ்கிறார் . தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது . அதே சமயம் மிகமிக அசாதாரணமானது .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    உடைந்து எழும் நறுமணம் / Udainthu Ezhum Narumanam

    175 163

    கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை , தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார் . நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார் . வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும் , பறந்து போய்விடும் . அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை . வீரபத்ரன்

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    எது நிற்கும் ? / Etu Nirkum ?

    250 233
    தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காதபோதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் . நாராயணசாமி .
    ‘ பசித்த மானுடம் ‘ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் . மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர் , நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள் .
    தத்துவ விசாரம் , சமூக விமர்சனம் , வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும் , பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று .
    இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு .
    அரவிந்தன்
    Add to cart
  • SAVE 7%

    எனது ஆண்கள் / Enathu Aangal

    190 177

    பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா , அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் . மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார் . ‘ எனது ஆண்கள் ‘ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது . பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார் . இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல ; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும் .

    Add to cart
  • SAVE 7%

    எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள் / Em.Vi.Venkatraam Cirukataikal

    1,250 1,163
    நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில் , ‘ மணிக்கொடி ’ முதல் ‘ எழுச்சி ’ வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது . பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்திரண்டு சிறுகதைகள் , இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம் பெறுகின்றன .
    எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே , இம்முழுத் தொகுப்பு . லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும் , ‘ பரிசோதனை எழுத்தாளராகவும் ’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல் ,
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%