திராவிட உறவுமுறை ‘ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய தாமஸ் டிரவுட்மன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல் . பாஷம் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர் . அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் 1968 முதல் 2010 வரை மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய டிரவுட்மன் இப்பொழுது அங்கே தகைசால் பேராசிரியராக விளங்குகிறார் . இவருடைய முக்கிய நூல்கள் : Dravidian Kinship ( 1981 ) ; Lewis Henry Morgan and the Invention of Kinship ( 1987 ) ; Aryans and British India ( 1997 ) ; ed . , The Aryan Debate ( 2005 ) ; Elephants and Kings ( 2015 ) .
1908 மார்ச் 13 . வெள்ளிக்கிழமை . கப்பல் ஒட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர் . தெருவில் இறங்கினர் . கூட்டம் கூடினர் . வேலைநிறுத்தம் செய்தனர் . அரசு சொத்துகளை அழித்தனர் . இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது . துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர் , நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர் . மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு , ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது . அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம் . ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது . இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல் , ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி .
த.சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொலகாப்பியத்தோடு ஒப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவா : இந்நூலில் அறிபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் – கிநாப்பையம் ( கி.பி. 800 ) , தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொலகாப்பியத்தையும் ( கி.மு. 300 500 ) ஓலியியல் நோக்கில ஓப்பீடுகிறார் . காலம் , இடம் , மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விகு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவததை , அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார் . அவ்வோற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அற்புக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார் , தமிழுக்கும் அற்புக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து , இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . மொழியியலா ? வரையறுத்துள்ள கிரேக்கம் , இலத்தீன , ஹீபரூ . அற்பு . சீனம் , சமஸ்கிருதம் , தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள் சமஸ்கிருத இலக்கண் மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின் , பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பீட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை ‘ தொல்காப்பியமும் அல – கிநாட்டம் ‘ என்னும் இந்நூலுக்கு உண்டு .
அறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது . அவருடைய வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் மதிப்பை உருவாக்குவது தொழிலாளரின் உழைப்பே என்றார் . நவசெவ்வியல் பொருளாதாரக் கருத்துகளை முன்வைத்த அறிஞர்களோ நுகர்வோரின் விருப்பத் தேர்வுகளே பொருள் மதிப்பின் அடிப்படை என்று வாதிடுகின்றனர் . ‘ ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ‘ என்ற நூலில் செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தை விரிவாக அறிமுகப்படுத்திய பேராசிரியர் எஸ் . நீலகண்டன் இந்நூலில் நவசெவ்வியல் பொருளியலை அதே ஆற்றொழுக்கான நடையில் தெளிவாக அறிமுகப்படுத்தியுள்ளார் . உயர்கல்வி மாணவர்கள் மட்டுமல்லாமல் பொது வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்வகையில் அவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்கும் இந்நூல் அரியதொரு கைவிளக்காகும் .
ஏன் , எதற்கு , எப்படி என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக் கட்டமைத்துள்ளது . இவ் வினாக்களுக்கு ஓற்றைப் பதில் இருந்தால் அப்புலம் தேங்கிவிடும் . பொருளியல் புலமும் இதற்கு விலக்கல்ல . காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள் இத்துறைக்கு அறிவுச் செல்வத்தை வழங்கிச் சென்றுள்ளனர் . அவை ஒன்றோடு ஒன்று இயைந்தும் முரண்பட்டும் விளக்கி நின்றதால் பொருளியல் என்ற அறிவுப்புலம் வளமானதாகத் திகழ்கிறது . இத்தகைய அறிஞர்கள் பற்றி முழுவதும் அறிந்துகொள்வது இக்கால மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் மிகவும் தேவை . அத்தேவையை உணர்ந்து அதற்கெனக் கடுமையாக உழைத்து , தமிழில் நூல்களை வெளிக்கொணரும் அரிய பணியைப் பேராசிரியர் நீலகண்டன் சிறப்பாகச் செய்துவருகிறார் . நெருடல் இல்லாத தமிழில் எடுத்துக்காட்டுகளோடு , சிறந்த பல்வேறு பொருளியல் சிந்தனைகள் பற்றிய அறிமுகத்தை வழங்குவது பேராசிரியர் நீலகண்டனின் தனிச்சிறப்பு .
தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள் . கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து , கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில் , மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்துகிறது ‘ நினைவுப் பாதை ‘ நாவல் . ” கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான , கட்டற்ற தன்மை , மிகுந்த அழகாகப் படுகிறது ” என்று நகுலனின் ‘ நிழல்கள் ‘ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருந்தும் .