கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்த நூல் கஷ்மீரிகளை , கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள , கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது .
இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது . பனிப்போர் முடிந்து , சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து , பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர் . இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன .
இந்திய – கஷ்மீர் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற மதவெறி உணர்வுகள் இந்தத் துணைக்கண்டத்தையே நிம்மதியிழக்கச் செய்து வருகின்றன . மதவெறியும் , தீவிரவாதமும் – அது பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ மக்களின் ஒற்றுமைக்கு எல்லையில்லா தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றன . இவை அனைத்தையும் தனக்கே உரிய அனுபவத்தோடும் , லாவகத்தோடும் விவரிக்கிறார் நந்திதா ஹக்ஸர் .
எழுத்தாளர் , கவிஞர் , சமூகச் செயல்பாட்டாளர் , நடிகை , பாடகி , பத்திரிகையாளர் , திரைப் படைப்பாளர் – எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சலோ .
கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர் , மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர் . கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு , வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர் .
ஆப்ரோ – அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள் . தனது ஆற்றலையும் மீட்டெழுச்சியையும் சுயசரிதையாக எழுதியிருக்கிறார் . தமிழுக்கு ஒருசில கவிதைகள் அறிமுகமாகியுள்ள நிலையில் மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை ஒரு முழுநூலாக வெளிவருவது இதுவே முதல்முறை ,