Showing 17–32 of 205 results

  • SAVE 7%

    திரு&திருமதி ஜின்னா /Mr And Mrs Jinnah

    750 698
    1918 ம் ஆண்டில் ருட்டி பெத்தித் . முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து , மொத்த சமூகமே அதிர்ந்தது ; சீற்றமும் அடைந்தது . அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம் ; வேறு வேறு மதம் ; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம் . இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை , ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர் , இதுவரை வெளிவராத கடிதங்கள் , நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள் , ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார் . தில்லி , பம்பாய் , கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும் , மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது .
    எவராலும் புரிந்து கொள்ள முடியாத தனித்துவத்தோடிருந்த ஜின்னா , பல எதிர்பார்ப்புகளோடும் காத்திருப்புகளோடும் இருந்த ருட்டி என்ற இருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி , அக்காலத்தில் நிகழ்ந்த சமூக , அரசியல் நிலைப்பாடுகளையும் பொருத்தமான பின்புலமாகக்கொண்டு எழுதியுள்ளார் .
    அரசியலிலும் வரலாற்றிலும் ஆர்வம்மிக்கோரும் , மறக்க முடியாத ஓர் அழகிய காதல் கதையை விரும்புவோரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் .
    Read more
  • SAVE 7%

    தீப்பற்றிய பாதங்கள் / Theeppatriya Paathangal

    550 512
    பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுகிறேன் என்று பெருமிதம் கொள்ளாததாக இருக்கிறது நாகராஜின் குரல் . இது ஒதுக்கப்பட்டவரின் சுயவெளிப்பாட்டு முறையாகவும் , தன்னாட்சி கொண்ட குரலாகவும் இருக்கிறது . இது அவர்களுக்கான உலகத்துக்குள் இருந்து பேசி நமக்கான , நம் உலகத்துக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொடுக்க முயல்கிறது . நாகராஜின் உலகத்தில் உடமையிழந்தவர்களும் அதிகாரமற்றவர்களும் நம்முடைய இரக்கத்துக்குக் கொஞ்சமும் இடம் கொடுப்பதில்லை ; நம்முடைய பரிதாபங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுமில்லை . அவர்களிடம் திடமான . ஏறக்குறைய உக்கிரமான , தன்னம்பிக்கை காணப்படுகிறது . செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும் . பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும் , மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குகிறார் நாகராஜ் . ஒரு சமயத்தில் நம் காலத்துக்குப் பொருந்தக்கூடிய அரசியல் ரீதியான கோட்பாட்டு ரீதியான புலங்களுக்கான தேடலாக இது இருந்தது . பின்பு , பரந்த தளத்தில் மீளிணக்கத்துக்கான தத்துவார்த்த தேடலாகக் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றம் கொள்கிறது . இதுவே , தலித்துகளுக்கான அதிகாரப் பகிர்வையும் தீண்டாமை என்ற சாபத்திலிருந்து உயர்சாதிகளைத் விடுவிப்பதையும் தன் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்த காந்திக்கு நெருக்கமாக நாகராஜைக் கொண்டுவருகிறது .
    அஷிஸ் நந்தி.
    Add to cart
  • SAVE 7%

    தீர்ப்பு / Theerpu

    399 371
    ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது . நமது நனவு நிலைக்கு உரித்தானது அது . நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது , நமது மனங்களை ஊக்குவிக்கிறது ; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது . சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ , அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம் ; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம் .
    மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் , இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார் . இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை .
    மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில் , நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார் , அரசியல்வாதியல்ல .
    Add to cart
  • SAVE 7%

    நரகம்/ Inferno

    750 698
    இந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள் , இலக்கியம் , அறிவியல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் உண்மையானவை .
    “ கன்சார்ட்டியம் ” என்பது ஏழு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு தனியார் நிறுவனம் . பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் கருதி அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது .
    இன்ஃபெர்னோ ( நரகம் ) என்பது தாந்தே அலிஜீரியின் காவியக் கவிதையான தெய்வீக இன்பியலில் விவரிக்கப்படுகின்ற கீழுலகம் . அதில் “ நிழல்கள் ” – அதாவது , வாழ்விற்கும் மரணித்திற் கும் இடையில் மாட்டிக்கொண்ட உடலற்ற ஆன்மாக்கள் என்ற தனியுருக்கள் குடியேறியுள்ள விரிவாக கட்டமைக்கப்பட்ட உலகமாக நரகம் சித்தரிக்கப்படுகிறது .
    Read more
  • SAVE 7%

    நாய்சார் / Naaisir

    140 130
    மூற்றத்தில் , கூடத்தில் , தாழ்வாரத்தில் , திண்ணையில் விளைந்தவை என் கதைகள் . என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள் . சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது . என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள் . அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை .
    கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன் . பாதசாரிகளுக்குத் திண்ணைகள் தேவை . ஆசுவாசமாய் அமர்ந்து கொள்ளவோ , ஒரே நீட்டாய் நீட்டி விட்டுக் கொள்ளவோ திண்ணைகள் அவ்வளவு இதம் .
    இத்தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்கள் . கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு துளி வாஞ்சை அவர்கள்மேல் உண்டானால் அதுவே என் கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்வேன் .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    நோர்வீஜியன் வுட் / Norwegian Wood

    350 326
    டோரு வாட்டனபி , அவனது விருப்பத்துக்குரிய பீட்டில்ஸ் பாடலைக் கேட்க நேர்கையில் , அவனது உற்ற நண்பனான கிஸுகியுடனான காதல் ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது . உடனடியாக அவன் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முந்தைய டோக்கியோவில் அவனது மாணவப் பருவத்துக்கு – அசாதாரணமான நட்பு , சுதந்திரமான பாலுறவு , காதல் , இழப்பு , ஆசை சார்ந்த உலகத்துக்குத் திரும்புகிறான் . அச்சமயம் அவனது வாழ்வினுள் மிடோரி எனும் இளம்பெண் குறுக்கிட , கடந்தகாலமா , எதிர்காலமா எதைத் தேர்வுசெய்வது எனும் இக்கட்டுக்குஆளாகிறான்
    இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும் , மாணவர் எழுச்சி , கட்டுப்பாடற்ற காதல் , மது மற்றும் 1960 – ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது . அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது .
    -Independent on Sunday
    Read more
  • SAVE 7%

    பட்ட விரட்டி / Patta Virati

    399 371
    இந்த தசாப்தத்தின் முக்கியமான புத்தகம் என்று தி டைம்ஸ் , டெய்லி டெலிக்ராப் மற்றும் கார்டியனால் தெரிவு செய்யப்பட்டது .
    ‘ மனதை உடைப்பது , அதிர்ச்சியளிப்பது , எழுச்சியூட்டுவது . ’ – அப்சர்வர்
    திகைட்ரன்னர் ( TheKiteRumer )
    பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய – அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம் .
    ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல் .
    காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல் . அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது . ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி , சோவியத் படையெடுப்பு , பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் , மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    பாதி இரவு கடந்து விட்டது / Paathi Iravu Kadanthu Vittathu

    450 419
    இந்திய மரபின் தேர்ந்த கதைசொல்லி அமிதபா பக்சி நவீனத்தின் சிக்கல்களைக் கையாள்வதில் பரந்த பார்வையும் கொண்டவர் , புறத்தை விவரிப்பது போலக் காட்டி அகத்திற்குள் ஆழ்ந்து செல்வது இவரது எழுத்தின் இயல்பு கதை கேட்கும் ஆனந்தத்தையும் வாழ்வுத் துயரம் தரும் பதற்றம் உள்ளிட்ட கொந்தளிப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தும் நுட்பம் ‘ பாதி இரவு கடந்துவிட்டது ‘ நாவலில் அமைந்திருக்கிறது . ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னோடும் போதும் படிப்படியாகப் பெருந்திறப்பு ஒன்றைக் கண்டடைய முடிகிறது . இத்தகைய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வு நழுவி இழுத்துச் செல்லும் மொழி வாசிக்கச் சுகமாக இருக்கிறது . சுழலில் தவிக்கும் தமிழ் எழுத்துப் பரப்பில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் .
    – பெருமாள் முருகன் .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    பேரரசன் அசோகன் / Ashoka

    550 512
    அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி , உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்ல்ஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும் , தன் மக்களின் மகிழ்ச்சி , எங்கும் அமைதி , விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் .
    In the Shadow of the Sword நூலின் ஆசிரியர் Tom Holland
    அசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து , மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார் . தங்களது வழக்கமான வேலைகளின் ஊடே , பலரது மிகவும் துணிச்சலான கண்டுபிடிப்புகள் , அவர்கள் தோண்டியெடுத்த பல சான்றுகள் , சான்றுகளில் மறைந்திருந்த செய்திகளின் பொருள் தேடுதல் இவை எல்லாவற்றையும் தாண்டி , இந்தியாவின் முதல் பெரும் மன்னனின் வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார் . இந்த அசோக மன்னனது சக்கரமே இன்றும் நம் நாட்டுக் கொடியில் நடு நாயகமாக வீற்றிருக்கிறது . இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வரலாற்று நூல் எந்த அளவு நம்மை ஈர்க்கக்கூடியது என்பதும் தெளிவாகிறது . “
    Rediscovery of India ” நூலின் ஆசிரியர் Lord Meghnad Desai
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    வரலாற்றில் பிராமண நீக்கம் / Varalatril Brahmana Nikkam

    550 512
    வரலாற்றில் பிராமண நீக்கம் … இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒர் பனுவலாக விளங்க முடியும் . அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற , ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சி செய்யாத நூல் – அண்மைக்காலத்தின் முதல் ‘ கீழிருந்து எழும் வரலாறு ‘ .
    கெய்ல் ஓம்வெட்
    முரண்பாடற்ற . நன்கு வாதிக்கின்ற படைப்பு … மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது . அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது .
    உமா சக்ரவர்த்தி
    இந்தப் புத்தகம் – இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற . மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று – புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ‘ நல்ல சிந்தனைகளைத் தேடுவதில் ‘ போராடுகின்றமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும் .
    மெயின்ஸ்ட்ரீம்
    இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது .
    சம்மர்ஹில் : ஐஐஏஸ் மதிப்புரை
    Add to cart