கோழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்கள் போல் தெரியலாம் . மற்ற சிலர் , நாங்கள் சாகசம் புரிவதில் ஆர்வமுள்ளவர்களென்றெல்லாம் பிரச்சாரம் செய்வார்கள் . இதெல்லாமே தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள் . எங்களுடைய சரியான பலம் இருப்பது , கிராமப்புறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புக்களாகிய விவசாயப் பெருங்குடி மக்களிடம்தான் . இந்த பெரும் சக்தியை நம்பியே நாங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து , வெளிப்படையான இந்த ஆயுதப்போராட்டத்தின் கொடியையுமேந்தி , பரந்து விரிந்து கிடக்கும் நம்முடைய கிராமப் புறங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம் . அங்கே எங்களது விவசாயத்தோழர்களுடன் இணைந்து எதிரிகளை வெல்கிற ஜீவமரணப் போராட்டத்திற்கான சக்தியைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாங்கள் இந்த இடங்களுக்கே திரும்பி வருவோம் . இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகங்களும் தேவையே இல்லை . இன்று நாங்கள் தற்போதைக்கு விடைபெறும் வர்க்க சகோதரர்களும் உடன்பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர் களுமெல்லாம் இதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் . ஏனென்றால் , இந்தத் துவக்கத்தின் எங்களுடைய மார்க்க வழிகாட்டியாக மாபெரும் வெற்றியாளனாகிய மாவோ சே துங்கின் சிந்தனைகளிருக்கின்றன .
ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில் ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார் . பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார் . இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும் , அவருடைய ஆழமான புலமையையும் , துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன .
…சி . ரங்கராஜன் முன்னாள் RBI ஆளுநர்
ராஜன் ஒரு புகழ்மிக்க முன்னாள் RBI கவர்னர் மட்டுமல்ல . நிதி , முதலாளித்துவம் , மக்களாட்சி ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவைப் பற்றிய உலகின் முதன்மையான சிந்தனையாளர் . இந்த தெளிவான ஒளிமிக்க உரைகளும் , கட்டுரைகளும் இன்றைய நிலை பற்றிய அவருடைய ஆழ்ந்த சிந்தனைக்கும் , உள்ளொளிகளுக்கும் ; ஒரு முன்னுரை .
– பிரத்தாப் பானு மேத்தா துணைவேந்தர் , அசோகா பல்கலைக்கழகம்
ரகு ஒரு அபூர்வமான மனிதர் , ஆழ்ந்த சிந்தனையாளர் , சிறந்த நிர்வாகி . எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புபவர் . அவருடைய கடந்த சில ஆண்டுகளின் எழுத்துகள் , உரைகள் ஆகியவற்றின் இத்தொகுப்பு இன்னொரு பரிமாணத்தை கொண்டுவருகிறது . பொருளாதாரம் , மைய வங்கி . சிக்கலான உலகின் புதிர் அவிழ்த்து தெளிவாகச் சொல்லும் அவருடைய ஆற்றல் .