சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம் . இதயத் துடிப்பை வேகமாக்கி , மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு .
-பீப்பிள் மேகஸின்
இது ஒரு முழுமையான மேதைமை . நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த , அறிவுத்திறன் வாய்ந்த , மிகவும் திறமையான டான் பிரவுன் எழுத்தாளர்களுள் ஒருவர் .
– நெல்ஸன் டெமில்
இது அவசியம் படித்தே ஆகவேண்டிய மாஸ்டர்பீஸ் படைப்பு . இந்த மிகச்சிறந்த புத்தகத்தின் மூலம் பூமியில் மிகத் திறமைவாய்ந்த திரில்லர் எழுத்தாளர்களுள் தானும் ஒருவர் என்ற பாராட்டுதலை பிரவுன் உறுதிப்படுத்திவிட்டார் , பக்கத்திற்கு பக்கம் சஸ்பென்ஸ் கொண்ட வரலாற்றுப் பிணைப்பு . உறுதியாக பரிந்துரைக்கப் படுவது .
– லைப்ரரி ஜர்னல்
இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர் . இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய , மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன , அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும் . இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது .
இது என் கனவுப்புத்தகம் . இழந்த நிலம் , மீட்ட நிலம் , மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள் . எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்கள் குறித்து , கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு கிராமமாக அலைந்தாற்றிய இவ் எழுத்துச்செயல் , ஆக்கிரமிப்பு அரசின் இராணுவத்தின் துப்பாக்கிகளின் நடுவே , எம் தாய் நிலத்திற்காக எழுத்தால் நிகழ்த்திய போராட்டம் .
இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும் , ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும் , காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது .
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் , முதல் பத்தியில் , முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர் , திப்புவுடையது . கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை , மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு , இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது . அதேவேளையில் , திப்புவின் அரசாங்கமும் , அதை அவர் நடத்திய விதமும் , அவரது இராணுவமும் , அவர் செய்த சீர்திருத்தங்களும் , மதக் கொள்கைகளும் , தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும் , சமூக சமத்துவமும் , அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன . பல்வேறு ஆய்வுகளின் மூலம் , திப்புவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை , சமூகத்திற்கு தனது பங்களிப்பாக இந்நூல் மூலம் தந்திருக்கும் மொஹிபுல் ஹசன் , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் . முதுபெரும் வரலாற்றாசிரியர் . அலிகார் பல்கலைக்கழகத்திலும் , காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தவர் . புதுடெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவியவரும் , அதன் முதல் பேராசிரியரும் ஆவார் .
சிறுவனாக இருக்கையில் நீச்சலடித்து ஆற்றைக் கலக்கி கண்சிவக்கக் குளித்த இந்த ஆற்றுக் கடவுகளில் இன்று கால் நனைக்க ஒரு துளி தண்ணீர் இல்லாது வறண்டு கெட்டுப் போய் கிடப்பதைப் பார்க்கும்போது எதையெல்லாமோ இழந்துவிட்ட ஓர் ஏக்கம் எனக்குள் என்னிடமிருந்து நான் பிறந்து வாழ்ந்த மண் அந்நியப்பட்டு விட்டதாகவோ , அல்லது பிறந்த மண்ணிலிருந்து நான் அந்நியப்பட்டு விட்டேனோ என்று எனக்குத் தோன்றினாலும் என் படைப்பு மனதில் அன்றைய பசுமைக்கிராமம் எழில் குன்றாமல் இருந்து வருகிறது .
இப்போது தொலைவிடத்தில் நான் தங்கி வந்தாலும் என் ஆத்மாவின் வேர்கள் ஓடிக்கிடப்பது இப்பவும் நீராலும் தென்னைகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பட்ட அரபிக்கடல் அலைகளின் இசை இனிமையில் புல்லரித்துக் கொண்டிருக்கும் அழகிய கன்னிக்கிராமத்தில் தான் . என் அடிமனதில் என் கிராமம்தான் எப்போதும் .