‘ ஆடிப்பாவைபோல ‘ என்ற நாவல் , அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது … முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள் . ஆசிரியனின் ‘ மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள் . ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம் . இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அவர்களுக்குத் தொடர்பில்லாமல் , திராவிட அரசியலின் இந்தி எதிர்ப்புக்கால வரலாறு வருகிறது .
இன்றைய கணினி , கிண்டில் போன்ற எந்திரங்கள் மூலம் வாசிப்பதற்கு ஏற்ற கதைசொல் உத்தி . இயல்களைத் தாண்டிப்போய் வாசிக்கும்போது நாம் இடைவெளி விடுகிறோம் . அந்தத் தாண்டுதல் ஒரு புது அர்த்தமாக அமைகிறது . 21 ஆம் நூற்றாண்டிற்குரிய இலக்கியம் தமிழில் கால் வைக்கிறது .
மனித நாடகங்களைக் காட்சிப்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்கது , மனத்தை அரிக்கும் அங்கதம் மற்றும் கூர்மையான வசனங்கள் .
மில்ட்ரெட் ஆடம்ஸ் , நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனம்
” மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது … இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம் , கட்டமைவு , மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன் . “
ஸ்டீபன் ஹ்யூ – ஜோன்ஸ் , நியூ ஸ்டேட்ஸ்மென்
நாவலின் தொடக்கத்தில் , ஆர்தேமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு , மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார் . கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார் . கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார் . ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார் . தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள் , போருக்குப்பின் இரக்கமற்ற , நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது , தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என , உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு , ‘ ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம் ‘ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம் .
சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர் , கோவிந்த் பன்சாரே , எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது . கருத்துரிமை , பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன , அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார் . இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார் . இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள் , கலைஞர்கள் , விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது அரசியல் பின்னணி ‘ என ஏகடியம் செய்யப்படுகின்றனர் .
இந்த அநாகரிகர்களுக்கெதிராக , நமது நாட்டின் பன்முகத்தன்மையை , மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது . அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம் .
அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது . கும்பல்படுகொலைகள் , கும்பல் வன்முறைகள் , அவதூறுகள் , கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன . இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன .
” இந்தியா ஏமாற்றப்படுகிறது ” என்னும் இந்நூல் ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு , பிரதீக் சின்ஹா , மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது . வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி , அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது .
இந்துக்களின் எதிரியா ஜவஹர்லால் நேரு ?
உலகிலேயே மிகப்பெரிய ஊழல்வாதப் பிரதமர்களில் ஒருவராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டாரா ?
உலகிலேயே நான்காவது பெரிய பணக்காரப் பெண்மணியா சோனியா காந்தி ?
தானொரு ‘ இந்து அல்லாதவன் ‘ என்று சோம்நாத் கோவிலின் பதிவேட்டில் எழுதிவைத்தாரா ராகுல் காந்தி ?
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் பிரச்சாரம் செய்யப்படுகிற மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு , உண்மையிலேயே வலுவான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா?
புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய வாதங்களை முன்வைத்து , வதந்திகளை உடைத்தெறிந்து , உண்மைகளைப் பேசுகிறது ” இந்தியா ஏமாற்றப்படுகிறது ” என்கிற இந்நூல் .
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது . தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது . சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது . தேசிய இனத்தை உருவாக்க முடியாது . ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது . சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் .