Showing 1185–1200 of 1276 results
-
Read more
கசார்களின் அகராதி ஆண் பிரதி / Dictionary Of The Khazars Male Edition
₹500₹465சர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம் , கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988 ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது . ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது . அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம் . இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம் . மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது . இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை . கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள் , நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம் , முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை , பெரும்புனைவாய் ஓர் இளவரசி . ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள் , இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம் .The New York Timesஇதன் கட்டமைப்பின் புதுமை மற்றும் உருவகங்களில் அமைந்துள்ள நகைச்சுவையான படைப்புத்திறம் உள்ளிட்ட அனைத்துமே உணர்ச்சிமிக்க , வெகுகொண்டாட்டமான வாசிப்பு அனுபவம் . “நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனம்The Washington Post” போர்ஹேஸ் அல்லது கார்சியா மார்க்வெஸ் போல . பாவிச்சிற்கு ) தன்னுடைய செப்பிடுவித்தை கொண்ட எழுத்திற்கு எவ்வாறு அதியற்புதமான . வெகுநுணுக்கமான சித்திரங்கள் மற்றும் மனம் மயக்கும் நிகழ்வுகளால் வலுச்சேர்க்க வேண்டுமென்று தெரிந்திருக்கிறது . “வாஷிங்டன் போஸ்ட் புக் வேர்ல்ட் -
Add to cart
கற்பனையான உயிரிகளின் புத்தகம் / Karpanaiyana Uyirkalin Puthagam
₹450₹419பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள் , அவற்றின் செவ்வியல் முன்னோடிகள் . கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள் , நோர்ஸ் மற்றும் சீனாவின் புராணங்கள் . இஸ்லாமிய மற்றும் பௌத்த நம்பிக்கைகள் . நாட்டுப்புறப் பாடல்கள் , புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனதில் உதித்த கற்பனையான விலங்குகள் என யாவும் ஒரு தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன . இந்தப் புத்தகம் அகராதியின் ( முழுமையானதாக இல்லாதபோதும் ) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது : இந்தியத் தொன்மங்களில் காணக்கிடைக்கும் யாளியைப் போல 120 விசித்திரமான உயிரினங்களை பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கிறது . அது விவரிக்கும் உயிரினங்களும் , யாளியைப் போல . உண்மையான உயிரினங்களின் வெவ்வேறு உறுப்புகளை ஒன்றிணைத்துக் கற்பனையாக உருவாக்கப்பட்டவையே . 1957 ஆம் வருடம் இந்தக் கையேடு வெளியானது . பிறப்பிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையை இழந்து கொண்டிருந்த போர்ஹெஸ் , அதற்கு மேலும் தான் எழுதுவதை வாசிக்கவோ பார்க்கவோ முடியாமல் போனதொரு காலகட்டத்தில் வெளியான இந்தக் கையேட்டை , அவருடைய அகவுலகுக்கு மிகவும் நெருக்கமான படைப்பென நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும் .
-
Add to cart
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? / I Know Why the Caged Bird Sings
₹300₹279எழுத்தாளர் , கவிஞர் , சமூகச் செயல்பாட்டாளர் , நடிகை , பாடகி , பத்திரிகையாளர் , திரைப் படைப்பாளர் – எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சலோ .கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர் , மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர் . கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு , வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர் .ஆப்ரோ – அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள் . தனது ஆற்றலையும் மீட்டெழுச்சியையும் சுயசரிதையாக எழுதியிருக்கிறார் . தமிழுக்கு ஒருசில கவிதைகள் அறிமுகமாகியுள்ள நிலையில் மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை ஒரு முழுநூலாக வெளிவருவது இதுவே முதல்முறை , -
Read more
கெட்ட வார்த்தை / Ketta Vaarthai
₹340₹316சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள் . அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்