Showing 1249–1264 of 1276 results
-
Add to cart
மாக்பெத் / Macbeth
₹350₹326ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும் , ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும் , இதற்கு முன்பே ஹாம்லெட் , லியர் அரசன் என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும் , தமிழை இயல்பாக , லாவகமாக , உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள் . இவற்றை ஆட்சியோடு கையாளுவதால் , மாக்பெத் என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக , ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது .ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள் , இடர்பாடுகள் , இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார் . அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம் ; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம் ; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம் ; அதன் பெருமையை , அதன் சிறுமையைக் காண்கிறோம் . பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம் . இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு , கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம் . இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர் .பேராசிரியர் அ . சீநிவாசராகவன் -
Add to cart
முள்ளம் பன்றிகளின் விடுதி / Mullampanrikalin Viduthi
₹170₹158கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும் , இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால் அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது . இக்கதைகள் இவை எழுதப்பட்டுள்ள genre- இல் இதற்கு முந்தைய எந்த எழுத்தாளரையும் பின்பற்றியிருக்கவில்லை ; அவர்களது பாணியைத் தொடரவில்லை என்பது இத்தொகுதியின் ஆகப் பெரிய பலம் . அந்த வகையில் இக்கதைகள் தமிழுக்கு மிகவும் புதியவை . எதார்த்த வகைக் கதை சொல்லலுக்கான காலம் முடிந்து விட்டது என்கிற மகத்தான செய்தியைத் தன்னுடைய அதிசாகசப் புனைவுகளாலும் விஞ்ஞானக் கற்பனைகளாலும் அமானுஷ்யமான சம்பவங்களாலும் பறைசாற்றுகிறது முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்புசாரு நிவேதிதா