வளர்ச்சி எனும் சிந்தனை , கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக , முன்னேற்றம் , நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப் படுகிறது . இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது . ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும் . வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும்
இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல் . என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல ; அகிம்சையும் சத்தியமும் . “ தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள் , பல்லவி கோபாலையர் , வீணை பெருமாளையர் , த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் ( 1944–93 ) ” என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதயநாதம் .
உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம் . பொருளாதார , ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு . இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு . தொழில் நுட்பத்தில் குளோபல் லீடர் . உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி என்றெல்லாம் பேசப்படுகிறது . அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரிக்கா இயற்கைப் பேரழிவுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தேசம் என்பதும் கூட
அந்த வகையில் பணி நிமித்தமாக சொந்தநாட்டைப் பிரிந்து அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு சாமானியன் தனது குடும்பத்தோடு இர்மா எனும் பெருஞ்சூறாவளியை எதிர்கொண்ட அனுபவம் ஒரு புதினமாகி இருக்கிறது .
பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் அப்பணிக்காக பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தபோது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைகாணப் புறப்பட்டார் . அதன் கதை ‘ எழில் மரம் ‘ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது . ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது . ஆப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பயணம் நீண்டது . குழந்தைகள் , பெற்றோர் , ஆசிரியர்கள் , புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது . ஏழைகள் தங்கள் கல்விக்கு உதவிகளை எதிர்பார்த்து இல்லை என்று கற்பித்தார்கள் . அவர்கள் தாங்களே தங்கள் பள்ளிகளைக் கட்டிக்கொள்ளவும் , தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் . எழில் மரம் என்ற சொற்றொடர் காந்தியடிகள் காலனி ஆதிக்கத்தின் போது பயன்படுத்தியது . இந்நூல் மூன்றாவது உலகில் எங்கே என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது என்று ஒப்பாரி வைக்கவில்லை . மாறாக என்னவெல்லாம் சிறப்பாக நடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது . முனைப்பாகச் செயல்படும் வேகமும் பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் பாலுள்ள அன்பும் இவ்வுலகின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்றன என்ற எளிய பாடத்தைக் கற்றுத்தருகிறது .