Showing 161–176 of 1276 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    இக்கிகய் / Ikkikai

    350 326
    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது , அதாவது , தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத்துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது , என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர் .
    அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு , உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து , உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து , உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும் . அதாவது , நீங்கள் உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிக்க இந்நூல் உங்களுக்கு வழி காட்டும் .
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%

    இடது திருப்பம் எளிதல்ல / Edathu Thiruppam Elithalla

    260 242
    தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத் 2014 பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல் .
    ” ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை , ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம் ” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத் , அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார் .
    கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம் . பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம் . ஆனால் போராட்டத்தின் மூலமாக சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று , விஸ்வரூபமாக மீண்டும் எழும் . என்பார் கார்ல் மார்க்ஸ் .
    ” இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது . இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது . ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன் ” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி , இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை , அவர்கள் வந்த பாதையை , சந்தித்த சவால்களை , அவற்றை எதிர்கொண்டவிதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார் .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    இது கறுப்பர்களின் காலம் / Idhu Karuppargalin Kaalam

    125 116

    நாங்கள் இன்னும் தொடப்படாத முரசுகளை செவிப்பறை கிழிய அடித்து நொறுக்குவோம் . காலத்தின் இருட்குகை சுவர்களில் எங்கள் சொற்களைப் பொறிப்போம் . வரலாற்றினுள் எங்களை நாங்களே எழுதுவோம்

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? / Intha Unmaikal En Maraikkappadukirana ?

    280 260
    உலக மர்மங்களில்மிக முக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும் , பயிர் வட்டச் சித்திரங்கள் ‘ ( Crop circle ) மனிதர்களால் , உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ , அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை , இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? ‘ என்னும் இந்த நூல் ஆராய்கிறது . அதன் தொடர்ச்சியாக இவற்றை உருவாக்குவது வேற்று கோள் வாசிகளாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு , வேற்று கோள் வாசிகளின் இருப்பு உண்மையானதா என்பதையும் ஆராய்கிறது .
    எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் , தர்க்கரீதியான ஆதாரங்களைப் படிக்கும் வாசகர்களிடம் கொடுத்து , அவர்களையே இறுதி முடிவுக்கான இடத்திற்கும் கொண்டு செல்கிறது . படிக்கப் படிக்க ‘ இப்படியும் இருக்குமா ? ‘ என்ற வாசகர்களின் ஆவலை இந்நூல் மேலும் தூண்டிக் கொண்டேயிருக்கும் .
    Add to cart
  • SAVE 7%

    இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் / Intha Kulathil Kalerinthavargal

    200 186
    சலனங்கள் மறைவதில்லை . தன்னை உருவாக்கிய , உயர்த்திய , பாதித்த , பரவசப்படுத்திய மனிதர்களை , ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து .
    கலைஞரும் எம்.ஜி.ஆரும் ; சிவாஜியும் கண்ணதாசனும் ; பாரதிராஜாவும் இளையராஜாவும் ; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறு அறிமுகம் ஆகும் போது , நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது . பெரிய மனிதர்கள் , சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது .
    வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது ; ஆழமானது ; உணர்ச்சிபூர்வமானது . அந்த உறவின் வலிமையை , ஆனந்தத்தை , அர்த்தத்தை , பரவசத்தை , பூரிப்பை , வலியை , வேதனையை , வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் .
    நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது .
    Read more