சிறந்த மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத்தோட்ட விருது , நல்லி திசை எட்டும் விருது , ஜி.யூ. போப் விருது வென்ற மகத்தான நாவல் “
எனக்கு இருபத்தேழு வயதாகிறது .. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன் . என்னுடைய பாவனைகள் எல்லாமே எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன . எதை எப்படி எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை . அதுதான் முக்கியமான விஷயம் .. ” என்று தன்னைக் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மிஷ்கினே அளித்தபோதும் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை . அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா , ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதில்தான் இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது .
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன் . விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது அஞ்சலை ‘ . இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு .
ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு . வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை . குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ‘ ஜீன்ஸ் பெரியார் ‘ கதை , மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது . புத்தர் , பெரியார் , அம்பேத்கர் , கார்ல் மார்க்ஸ் , காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து இளையராஜா , தனுஷ் என சமகால ஆளுமைகள் வரை கதைமாந்தர்களாகக் கொண்டவை இந்தக் கதைகள் . எதார்த்தவாதம் , மீ புனைவு , அ – நேர்கோட்டுக் கதைசொல்லல் , அறிவியல் புனைவு என பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் , வாழ்க்கை குறித்த புதிய பார்வைகளை முன்வைப்பவை .
கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான் . ‘ அஞ்ஞாடி … ‘ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல் …
பூமணியின் மொழிக் கட்டுப்பாடு . பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலைசெய்து கொண்டிருப்பதால் ‘ சொகமாக ‘ – நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது – நாவலை வாசித்துக்கொண்டே போகலாம் . இதுதான் மொழிக்கு , பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை . ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது .
தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர் . 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது . ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர் , அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர் . இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது . அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல . தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு , கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் .
தேசிய , சனநாயக , மனித குல விடுதலை இதன் மையம் . எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல் , ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடனான , புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும் . மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது ; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது . அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி . போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது . போராட்டமே நம்மை உருவாக்குகிறது . போராட்டத்தில் தான் நமது வரலாறு , மொழி , இருப்பு தங்கியுள்ளது . அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும் ; எது செய்தாலும் இருக்கும் . அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம் : நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல : உலகை மாற்றக் கனவு காண்பவர்கள் .