உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா , பிரான்ஸ் , ருஷ்யா , ஹாங்காங்க் . மெக்சிகோ , சீனா , இத்தாலி , ஸ்பெயின் , நியூசிலாந்து , அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது . சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.
தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும் . தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் ” என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது ( 1925 ) முதல் ….
இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு ( 1973 அக்டோபர் 20 ) ஆளானது வரை …
தந்தை பெரியார் பேசியது , எழுதியது , செயல்பட்டது அனைத்தும் , எல்லாத் தமிழ் மக்களுக்குமே .
அதை உணராமல் , அவரைப் படிக்காமலேயே , ‘ ஈ.வெ.ரா. தலித் விரோதி , ஆதிக்க சாதிகளுக்கான பெரியார் ‘ என நிறுவ முயற்சிக்கும் அபத்த களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல் .
குடி அரசு , விடுதலை இதழ்களின் 75 ஆண்டு பதிவுகளையே ஆதாரமாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது . ஈரோட்டுக் கண்ணாடி மூலமாக இருபதாம் நூற்றாண்டுச் சமூக நிலையைக் காட்டும் புத்தகம் இது !