பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை . இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன . அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு . நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது . அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பதில்லை . தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை . மனிதர்களை , அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம் .
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் , பின்நவீனத்துவ காலகட்டத்தில் , மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில் , என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது . காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம் .
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும் இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார் . காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார் . காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார் . பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது .
உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும் .
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .
‘ இந்தியப் பயண உலகின் தந்தை ‘ எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும் , வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல் .
உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும் ‘ என அறிவித்துக்கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல் , புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும் .
ஒரு திரைக்கலைஞனின் வாழ்வனுபவம் என்பது , பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ , அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்களை ஆதாரபூர்வமாக அணுகுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்களையோ கொண்டிருப்பதோடு எம்.ஆர்.ராதாவை நாட்டின் முடிந்துவிடுகிறது . வாசிப்பது ஆனால் என்பது , தமிழ் அரைநூற்றாண்டுகால அரசியல் வரலாறாகவும் , அரசியல் மாற்றங்களின் சாட்சியங்களாகவும் மேடைக்கலைஞன் இருக்கிறது . இதுதான் திரைக்கலைஞன் என்பதிலிருந்து அவரை மக்கள் கலைஞனாக தனித்துவமாக்கிக் காட்டுகிறது . மூடப் பழக்கவழங்கங்களால் மூழ்கிக் கிடந்த மக்களை மீட்க , தான் சார்ந்த கலையையே ஓர் ஆயுதமாகவும் , கொட்டகைகளையே போராட்டக்களமாகவும் மாற்றிக்கொண்டவர் எம்.ஆர்.ராதா . அப்படிப்பட்ட ஒரு சமூகப் போராட்டக் களத்தையும் , அதில் ஒரு கலைஞனின் பங்களிப்பையும் பத்திரிகையாளர் மணா இந்நூல் மூலம் சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளார்