ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது . அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள் . கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி .
கார்ல் எழுத்துக்களின் மற்றுமொரு முக்கியமான பண்பு அவை ideological ( கருத்து நிலை ) சுமையற்றவை என்பது . அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை , அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார் .
பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார் . அவற்றை விமர்சிக்கிறார் . மறுக்கிறார் . அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘ சமூக ஊடகங்களின் மனசாட்சியாகவும் ‘ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார் .
முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் . சாத்தியமில்லை . சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள் , கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள் . சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ் . ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் . ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் .