கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும் , இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால் அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது . இக்கதைகள் இவை எழுதப்பட்டுள்ள genre- இல் இதற்கு முந்தைய எந்த எழுத்தாளரையும் பின்பற்றியிருக்கவில்லை ; அவர்களது பாணியைத் தொடரவில்லை என்பது இத்தொகுதியின் ஆகப் பெரிய பலம் . அந்த வகையில் இக்கதைகள் தமிழுக்கு மிகவும் புதியவை . எதார்த்த வகைக் கதை சொல்லலுக்கான காலம் முடிந்து விட்டது என்கிற மகத்தான செய்தியைத் தன்னுடைய அதிசாகசப் புனைவுகளாலும் விஞ்ஞானக் கற்பனைகளாலும் அமானுஷ்யமான சம்பவங்களாலும் பறைசாற்றுகிறது முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு