அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலாக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ். அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக்கொடுக்கும் ஆய்வுச்சட்டகங்கள் புதுமையானவை, முக்கியமானவை. தருமராஜின் ஆய்வு முறையியலையும் அந்த முறையியலைப் பொருத்தி ஆராய்வதன் மூலம் வெளிப்படும் அயோத்திதாசரையும் பன்முக நோக்கில் அனுதி, விவாதிக்கிறது இந்நூல்.
ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், சமஸ், பிரேம், ஏர் மகாராசன், சரவண கார்த்திகேயன், சுரேஷ் பிரதீப், ஈஸ்வரபாண்டி, சாந்தி நக்கிரன், இராவணன் அம்பேத்கர், கோபிநாத், கலையரசி, சக்திவேல், கார்த்திக், மனோஜ் பாலசுப்ரமணியன் ஆகியோர் வெவ்வேறு கோணங்களிலிருந்து தர்மராஜின் பங்களிப்புகளை ஆராய்கின்றனர். தருமராஜின் கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுக்கும் பெரும் பணியை பணியை மேற்கொண்டதோடு ஓர் ஆய்வுக்கட்டுரையையும் வழங்கியிருக்கிறார் அரிபாபு.
சமயம், தொன்மம், பண்பாடு, கலை, அரசியல், மொழியியல், மூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் தேடலும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இந்நூல் பல புதிய திறப்புகளை அளிக்கும் என்பது உறுதி.