Showing 97–112 of 144 results
-
Read more
நுகத்தடி / Nugathadi
₹210₹195இந்தியாவில் , தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘ நுகத்தடி ‘ நாவல் வந்திருக்கிறது . குமார் என்கிற துப்புரவுத் தொழிலாளியின் பார்வையில் புழுவிலும் கேவலமாக மிதிக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கை அவலங்கள் விவரிக்கப்படுகின்றன . காவல் துறையும் , சிறை நிர்வாகமும் சாதாரண உழைக்கும் மக்களை எப்படி ஒடுக்கி அவர்கள் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதே நாவலின் பிரதான மையம் . தலையில் மலக்கூடைகளுடன் , ஓட்டல்களின் எச்சில் இலைத்தொட்டிகளுக்குள் இறங்கிக் கழிவுகளைத் தோளிலும் , தலையிலும் சுமக்கும் மக்களை , இந்தச் சமூக அமைப்பு எப்படி ஒடுக்குகிறது என்று தோலுரிக்கும் படைப்பு . கலை நயம் , மொழிப்புலமை , இன்னபிற படைப்புத் திறன்கள் பற்றி உபதேசம் செய்பவர்கள் இந்த நாவலைப் படித்துப் பார்ப்பது நல்லது . சலவான் நாவலுக்குப்பிறகு பாண்டியக் கண்ணன் படைத்துள்ள மல நாற்றமும் இரத்தக்கவுச்சியும் வீசும் மாமிசப்படைப்பு .கமலாலயன் -
Read more
பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில் / Facisa Megangal Suzhndhirukkum Kaalathil
₹120₹112முதலில் அவர்கள் ( நாஜிகள் ) சோசலிஸ்டுகளுக்காக வந்தனர் . நான் வாளாவிருந்தேன் . ஏன் ஏன்றால் நான் சோசலிஸ்ட் அல்ல . பின்னர் அவர்கள் தொழிற்சங்கத்தினருக்காக வந்தனர் . நான் வாளாவிருந்தேன் . ஏன் என்றால் நான் தொழிற்சங்கத்தினன் அல்ல , பின்னர் அவர்கள் யூதர்களுக்காக வந்தனர் , நான் வாளாவிருந்தேன் . ஏன் என்றால் நான் யூதன் அல்ல . பிறகு அவர்கள் எனக்காக வந்தனர் . அப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை .– மார்ட்டீன் நீமொள்ளர் -
Read more
பார்வை தொலைத்தவர்கள் / Paarvai Tholaithavarkal
₹295₹274இது ராஜபாட்டை . இரு மருங்கும் உயர உயரமான கட்டடங்கள் . இந்தப் பகுதியில் புழங்கும் கார்கள் விலைமிக்கவை . பெரிய , வசதி அதிகமான கார்கள் . அந்தக் கார்களை இப்போது நிறைய குருடர்கள் , படுத்து உறங்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் . பெரிய படகுக்கார் ஒன்று வீடாகவே உருமாற்றம் பெற்றிருந்தது . ஒரு வீட்டுக்குத் திரும்பி வருகிறதை விட காருக்குத் திரும்புவது குருடர்களுக்கு எளிதாய் இருந்தது போல . இதில் இப்போது குடியிருப்பவர்கள் திரும்பி வர வேண்டுமெனில் எப்படி வந்து சேர்வது ? அகதி முகாமில் நாம் சொன்ன வழிமுறை தான் . அங்கே படுக்கைகளுக்கு எண்ணிக்கை வைத்தோம் . இங்கே கார்களை கோடியில் இருந்து ஒண்ணு ரெண்டு என எண்ணியபடி வந்து தன் காரை அடையலாம் . வலது வாடை . 27 வது கார் . நான் வீட்டுக்கு வந்தாச் ! … நாவலிலிருந்து