Showing 65–80 of 344 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993 / Chellammal Ninaivu Kuripugal 1993

    180 167

    செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் , அவமதிப்புகள் , பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன . குடும்ப அமைப்பின் சிக்கலான உறவுகள் , உரையாடல்கள் , உணவு படைத்தல் , அவநம்பிக்கைகள் , அவதூறுகள் இவற்றுடன் வரும் அழகு , அன்பு , பாசம் , கனிவு , காதல் இவற்றை நேரடியாக மட்டுமில்லாமல் தன்மறிவாகவும் கூறும் இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது . பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் புரிதலுக்கான இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது .

    Add to cart
  • SAVE 7%

    சேரன்மாதேவி / Ceeranmaateevi

    375 349

    சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும் . குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன் . ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ( வ.வே.சு. ) ஐயர் கூறினார் . இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ . வி . ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம் .
    . டாக்டர் வரதராஜுலு நாயுடு ( 1924 )
    வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும் , ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல . வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும் , கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும் .
    பெரியார் ( 1925 )
    இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன .
    சொ . முருகப்பா ( 1925 )

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    சைவத் திருக்கோவிற் கிரியை நெறி / Saivat Tirukkovir Kiriyai Neri

    425 395

    கைலாசநாதக் குருக்கள் , இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் . சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர் . குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர் . இவர் எழுதிய நூற்களில் ‘ சைவத் திருக்கோவிற் கிரியை நெறி ‘ என்ற நூலின் முதல் பதிப்பு 1963 இல் வந்தது . இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம மரபுகளையும் தென்னிந்தியக் கோவில்களில் நிகழும் பூஜை ஆகமச் சடங்குகளையும் ஆராய்ந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது . காலச்சுவடு வெளியீடாக வரும் இந்த நான்காவது பதிப்பில் புதிய புகைப்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன .

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    ஜீவனாம்சம் / Jeevanamsam

    150 140

    பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல் . ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது . பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது .

    Add to cart
  • SAVE 7%

    ஜெர்மன் தமிழியல் / Jerman Tamizhiyal

    200 186

    தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது . அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள் . ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்ப அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தி பயன்படுத்தினர் . அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று , எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர் . இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை ; மாபெரும் புரட்சி . அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கின்றது

    Add to cart
  • SAVE 7%

    ஞானக்கூத்தன் கவிதைகள் / Naanakkuuttan Kavitaikal

    895 832
    ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது . தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது . அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள் , புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது .
    ஆனந்த்
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%

    தமிழக ஓவியங்கள் / Thamizhakaga Oviyangal

    495 460

    தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது . வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது . குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவரோவியங்களும் , ஆவணக் களரிகளில் மறைந்துகிடக்கும் சித்திரங்களும் பெயர் பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் இந்நூலின் பேசுபொருளாகின்றன . வரலாற்றின் பின்புலத்தின் இக்கலைப்படைப்புகள் விவரிக்கப்படுகின்றன . சில ஆலயங்களை அலங்கரித்திருந்த ஆனால் புனரமைப்பின் பெயரால் அழிக்கப்பட்டு விட்ட அரிய ஓவியங்களின் வண்ணப் படங்கள் இதில் இடம் பெறுகின்றன . பல்லாண்டு கால ஆழ்ந்த ஆராய்ச்சி புகைப்படங்கள் , கோட்டோவியங்கள் இந்நூலின் சிறப்பு .

    Add to cart
  • SAVE 7%

    தமிழகத்தில் அடிமை முறை / Thamizhakathil Adimai Murai

    200 186

    மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்புநிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய நூல் . சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய , தமிழ்நாட்டில் நிலவிய கல்வெட்டுகள் , அடிமைமுறையை . செப்பேடுகள் . ஓலைச்சுவடிகள் , காகித ஆவணங்கள் . இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் இந்நூல் ஆராய்கிறது .

    Add to cart
  • SAVE 7%

    தருநிழல் / Tarunizal

    190 177
    பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர் . சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘ தருநிழல் ’ .
    பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல் , அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக , அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்பதுதான் . இந்த நாவலும் ஒருவகையில் ஆசிரியர் தனது இளம்பருவத்தின் தனி அனுபவங்களையும் சமூகப் பாடங்களையும் மீட்டெடுத்து இன்றைய பார்வையில் பார்க்கும் முயற்சிதான் . மீளாமல் சென்றுவிட்ட அந்த நாட்களை இன்று நினைவுகூர்ந்து சொல்லும்போது தன்னை மிகையாகவும் சாகசமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு மிகுதி . இன்றைய பக்குவப்பட்ட பார்வையிலும் தன் பழைய அனுபவங்களை அவை நிகழ்ந்த தருணத்தின் தட்பவெப்பத்துடன் இயல்பாகச் சொல்கிறார் ஆசிரியர் . இந்தப் பகட்டின்மையே நாவலின் முதல் மேன்மை .
    சென்ற நூற்றாண்டின் 70-80கள் உலகெங்கும் புதிய திசை மாற்றங்களுக்கு அடிகோலின . தனிநபர் வாழ்விலும் சமூகச் சூழலிலும் பண்பாட்டுப் பின்புலத்திலும் மாற்றத்தைத் தூண்டின . தமிழ்ச் சூழலிலும் அதன் விளைவுகள் தென்பட்டன . அவற்றை மையப்பாத்திரமான சந்திரனின் வாழ்க்கைப் பின்புலத்தில் சித்திரிக்கிறது நாவல் . கடந்துபோன காலத்தை மீண்டும் கட்டியெழுப்பிப் பார்க்கிறது . இது இதன் இரண்டாவது சிறப்பு .
    மொழிபெயர்ப்பாளராக வேறுபட்ட கூறுமுறைகள் கொண்ட ஆக்கங்களை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர் ஆர் . சிவகுமார் . ஆனால் எந்தச் சாயலும் படியாமல் தனது அனுபவங்களை நேரடியாகவும் எளிமையாகவும் வாசகருக்கு நெருக்கமான தொனியிலும் படைப்பாக்கியிருக்கிறார் . இந்த உண்மையுணர்வே நாவலின் உச்சமான இயல்பு .
    சுகுமாரன்
    Add to cart
  • SAVE 7%

    தலைப்பில்லாதவை / Talaippillaatavai

    550 512
    யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘ மணற்கேணி ‘ 2008 இல் வெளிவந்தது . ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம் .
    பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ” தலைப்பில்லாதவை ‘ முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும் , விலகி அடைந்த வளர்ச்சியாகவும் காணப்படுகிறது . வரையறுக்கப்பட்ட பக்க அளவுக்குள் கச்சிதமான சொற்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்ற அளவில் முன்னதன் தொடர்ச்சி . ஒரே பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டுப் பல முகங்கள் , பல குரல்கள் கொண்ட கதைகளாக அமைந்திருப்பது விலகல் . முதல் தொகுப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் கதைகள் என்பது வளர்ச்சி . படிக்க சுவாரசியமானவை , படித்த பின் யோசிக்க வைப்பவை என்பன இரண்டு தொகுப்புகளுக்குமான பொதுமை .
    ரத்தினச் சுருக்கமான , நயமான வரிகளிலான விவரணை , உரையாடல்களில் குவிமையத்தை விட்டு விலகாத இறுக்கம் , அடிப்படை விவரிப்பின் சுழிக்குள் வாசக மனத்தை ஈர்த்துவிடும் கூறுமுறை – இவை இந்தக் குறுங்கதைகளின் இயல்புகள் . புதிய இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகள் முன்வைக்கப்படும் இன்று சிறுகதை அளிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கும் சீரிய முயற்சியாக யுவன் சந்திரசேகரின் கையடக்கக் கதைகளைச் சொல்லலாம் . இந்த வகைமையின் தனித்துவமான முன்னெடுப்பாகவும் இந்தத் தொகுப்பைக் காணலாம் .
    சுகுமாரன்
    Add to cart