இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல் . என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல ; அகிம்சையும் சத்தியமும் . “ தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள் , பல்லவி கோபாலையர் , வீணை பெருமாளையர் , த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் ( 1944–93 ) ” என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதயநாதம் .
உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம் . பொருளாதார , ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு . இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு . தொழில் நுட்பத்தில் குளோபல் லீடர் . உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி என்றெல்லாம் பேசப்படுகிறது . அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரிக்கா இயற்கைப் பேரழிவுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தேசம் என்பதும் கூட
அந்த வகையில் பணி நிமித்தமாக சொந்தநாட்டைப் பிரிந்து அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு சாமானியன் தனது குடும்பத்தோடு இர்மா எனும் பெருஞ்சூறாவளியை எதிர்கொண்ட அனுபவம் ஒரு புதினமாகி இருக்கிறது .
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள் . அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம் . எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன . அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா . அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது . 1940 களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை .