இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன் . உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன . எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள் . கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல் .
அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய , ஆஃப்ரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை . மூன்றாக உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே . அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது .
இது ஒரு வேகம் மிகுந்த வலுவான நாடகம் . தயாரிப்பிலும் நடிப்பிலும் அதிக உழைப்பையும் பாசாங்கின்மையும் தேவைப்படும் . ஆரம்பம் முதலே ஒரு விறைப்பு . கடைசி வரையிலும் . நாடகத்தின் வலுவே சம்பாஷணையில்தான் . இது குடும்ப நாடகம் . நிஜ மனிதர்கள் சம்பந்தப்பட்டது .
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘ சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது . அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்த ‘ அதே கதை , மீண்டும் ஒரு முறை ‘ தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத , ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது .