Showing 33–44 of 44 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை / Rich Dad Poor Dad

    299 278
    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி மாற்றியுள்ளார் . பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் அறிவுரைகளோடு முரண்பட்டு நிற்கின்ற கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள அவர் , தன் கருத்துக்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவர் . பொருளாதாரக் கல்வி அவசியம் தேவை என்று உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றவர் என்று உலக அளவில் அவர் மதிக்கப்படுகிறார் .
    “ மக்கள் பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் , அவர்கள் பல வருடங்களை ஏட்டுக் கல்வி கற்பதற்காகச் செலவிட்டுள்ள போதிலும் , பணத்தைப் பற்றித் துளிகூடக் கற்றுக் கொள்ளாமல் இருந்துவிட்டதுதான் . அதன் விளைவாக அவர்கள் பணத்திற்காக வேலை செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்க அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை . ” – ராபர்ட் கியோஸாகி
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பைப்லைனில் பணம் / The Parable of the Pipeline

    195 181
    ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் !
    நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஆனாலும் , கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர் , செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் .
    ஏன் ? ஏனெனில் , அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர் . ‘ பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் ‘ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர் .
    இதுதான் உண்மையான பொருளாதாரப் பாதுகாப்பு !
    பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது ? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான் ! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள் , ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது . அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன் . பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் , ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி .
  • SAVE 7%
    Add to cart

    மாயாஜாலம் / The Magic

    350 326

    கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித நூலில் புதைந்து கிடந்த வார்த்தைகள் , அதைப் படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும் , குழப்பமூட்டுவதாகவும் , முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது . அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும் , நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே அறிந்து வைத்திருந்தனர் . மாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில் , ரோன்டா பைர்ன் , வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார் . இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் . நீங்கள் யாராக இருந்தாலும் சரி , நீங்கள் எங்கிருந்தாலும் சரி , உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி , இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது .

  • SAVE 7%
    Add to cart

    யசோதரை ஒரு புதினம் / Yashodhara : A Novel

    225 209
    சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி , இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது . ஆனால் , கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறிய நேரத்தில் , ஒருசில நாட்களுக்கு முன்புதான் பிரசவித்திருந்த அவனுடைய இளம் மனைவியான யசோதரை ஏன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என்று நாம் ஒருபோதும் யோசிக்காமல் போனது ஏன் ?
    யசோதரை ‘ என்ற இந்நூலில் , வரலாற்றின் இடைவெளிகள் முழுமையாகவும் உக்கிரமாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன ; யார் அந்த இளம்பெண் ? உலகைப் பற்றி அவள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை எது செதுக்கி வடிவமைத்தது ? அவள் தன்னுடைய பதினாறாவது வயதில் சித்தார்த்தனை மணமுடித்தபோது , தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை விரைவில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதை அவள் அறிந்திருந்தாளா ? வோல்காவின் இந்தப் பெண்ணியப் புதினத்தில் நாம் சந்திக்கின்ற யசோதரை , கூரிய சிந்தனை கொண்டவளாகவும் இரக்கவுணர்வு நிரம்பியவளாகவும் நமக்கு எதிர்ப்படுகிறாள் , ஆன்மிகத் தேடலில் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் பங்கு கொள்ளுவதற்கு வழிகோல அவள் விரும்புகிறாள் . சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின்னால் இருந்த உண்மையான வலிமையாக யசோதரை இந்நூலில் வெளிப்படுகிறாள் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ரசவாதி / The Alchemist

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    விண்ணளவு சாதனை / Maximum Achievement

    399 371
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வில்லாளன் / Villalan

    250 233
    ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும் , தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது !
    இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா , ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து , பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர் . பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான் . அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக , வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார் .
    செயலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லாமல் வாழ்வது மனநிறைவு தராது , நிராகரிப்பு குறித்த பயத்தாலும் தோல்வி குறித்த பயத்தாலும் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை ; மாறாக , ஒருவர் சவாலான காரியங்களில் இறங்க வேண்டும் , தன்னிடம் துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும் , நம்முடைய தலைவிதி நமக்கு வழங்குகின்ற எதிர்பாராத பயணத்தை நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் சாராம்சமாகும் .
    மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைக்கான அடித்தளத்தைப் பாலோ கொயலோ இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார் . கடின உழைப்பு , ஆழ்விருப்பம் , குறிக்கோள் , அக்கறையுணர்வு , தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு , ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் ஆகியவையே அந்த அடித்தளம் என்று அவர் வலியுறுத்துகிறார் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஹோமோ டியஸ் / Homo Deus

    499 464