Showing 17–32 of 44 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    எனது பயணம் / My Journey

    195 181
    சின்னஞ்சிறு தீவான ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நம் நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராக உருவான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையானது , அசாதாரணமான மன உறுதி , அபாரமான தைரியம் , அயராத விடாமுயற்சி , செய்கின்ற ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஆகியவற்றைப் படிக்கற்களாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகின்றது .
    இப்புத்தகத்தில் டாக்டர் கலாம் அவர்கள் , தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஆசுவாசமாக நின்று திரும்பிப் பார்த்து உணர்ச்சிபூர்வமாக அசை போடுகிறார் . அவை ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் எவ்வாறு பெரும் தாக்கத்தை விளைவித்தன என்பதை வாசகர்களோடு அவர் பகிர்ந்து இருந்தபோதும் கொள்கிறார் . தான் சிறுவனாக வளர்ந்தபோதும் வாலிபனாக தாக்கத்தை தனது வாழ்க்கையில் ஆழமான ஏற்படுத்திய நபர்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பற்றியும் அவர் இதில் எடுத்துரைக்கிறார் . ஆழ்ந்த தெய்வ பக்தியுடன் இருந்த தனது தந்தையார் , அன்பே உருவான தனது தாயார் , தனது கண்ணோட்டத்தையும் தனது சிந்தனையையும் செதுக்கிய வழிகாட்டிகள் போன்ற , தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைத்து அன்புள்ளங்களையும் அவர் இதில் அவர் இதில் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறார் .
    சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் , பூரணமானதாக விளங்கும் டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அழகான பாடங்கள் இந்நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கதாநாயகன் / Hero

    599 557
    உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது . இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர் . நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் . நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை , நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது . அந்தப் பயணம் பற்றியதே இந்நூல் .
    இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரண்டு வெற்றியாளர்கள் , நம்புதற்கரிய தங்கள் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு , நீங்கள் உங்களுடைய மாபெரும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்தோடும்தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதையும் , அப்படி வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைந்து இவ்வுலகை ” மாற்றுவீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள் .
    முன்பு ஒரு கதாநாயகன் இருந்தான் . ‘
    கதாநாயகன் ‘ குறித்து மேலும் தகவலறிய
    இணையத்தளத்திற்கு வருகை தாருங்கள் .
  • SAVE 7%
    Add to cart

    கர்ணன் / Karnan

    899 836
    என்ன , மீண்டும் மகாபாரதக் கதையா ? ” என்று நீங்கள் மலைக்க வேண்டாம் . நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது : பாண்டவர்கள் நல்லவர்கள் , துரியோதனன் வில்லன் ; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான் ; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார் ; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள் ; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான் ; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர் . என்ன , சரிதானே ?
    ஆனால் இதே மகாபாரதக் கதையை மராத்திய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார் . இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார் . அதன் விளைவாக , இப்புதினம் , ‘ நான் யார் ? ‘ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது .
    மேலும் , காலங்காலமாக மனித சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார் . ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும் , அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும் , சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் , ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது . இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும் , அப்பின்புலத்தின் காரணமாக சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன .
    எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம் , இந்தி , மலையாளம் , கன்னடம் , வங்காளம் , குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது .
    இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன் !
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி / How to Stop Worrying and Start Living

    195 181
    டேல் கார்னகியின் இந்த அற்புதமான புத்தகத்தைக் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி , தங்கள் வாழ்க்கையிலிருந்து பயத்தையும் கவலையையும் அறவே நீக்கி , மனநிறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் . இதில் இடம்பெற்றுள்ள எளிதில் நடைமுறைப்படுத்தத்தக்க உத்திகளை நீங்கள் சுவீகரித்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை பிரகாசமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மலரும் என்பது உறுதி .
    இப்புத்தகத்தில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கண்டறியலாம் :
    பணத்தைப் பற்றிய கவலைகளை அறவே நீக்குவது எப்படி
    உற்சாகமாகவும் என்றென்றும் இளமையாகவும் இருப்பது எப்படி
    தினமும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உருவாக்கிக் கொள்ளுவது எப்படி
    வேலை , தொழில் , மற்றும் வணிகம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி
    மொத்தத்தில் , மகிழ்ச்சிகரமான மற்றும் முழுமையானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் ஒரு வழிகாட்டி நூல் இது .
    உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரான டேல் கார்னகி , சுயமுன்னேற்ற ஆசான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் . 1936 ம் ஆண்டில் , ‘ நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி ‘ என்ற அவரது முதல் புத்தகம் வெளியானதிலிருந்து , கோடிக்கணக்கான வாசகர்கள் ஓர் ஒளிமயமான வாழ்க்கையை வாழ அந்நூல் உதவி வந்துள்ளது . அது இன்றளவும் தொடர்கிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    காலை எழுந்தவுடன் தவளை / Eat That Frog

    150 140
    உங்களுடைய செய்யப்பட வேண்டிய வேலைகள் ‘ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை , இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை . வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை . முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி , அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர் . அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டுவிடுகின்றனர் .
    காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக , உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால் , அன்று அதைவிட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது . உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற , ஆனால் உங்கள் வாழ்வின்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு , ‘ ஒரு தவளையை உட்கொள்வது ‘ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார் .
    பின்வரும் விஷயங்களை அவர் இந்நூலில் தெளிவாக விளக்குகிறார் :
    நீங்கள் தினமும் உங்களுடைய மிக முக்கியமான வேலைகள்மீது மட்டும் கவனம் செலுத்தும் விதத்தில் உங்கள் நாட்களை ஒழுங்கமைத்துக் கொள்வது எப்படி ?
    மின்னணுக் கருவிகள் உட்பட ஏராளமான விஷயங்கள் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கத் தயாராக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து ஒருமித்த கவனக்குவிப்புடன் செயல்படுவது எப்படி ?
    • வெற்றிக்கான மூன்று முக்கியப் பண்புநலன்களான தீர்மானம் மேற்கொள்ளுதல் , ஒழுங்கை வளர்த்துக் கொள்ளுதல் , உறுதியுடன் செயல்படுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது எப்படி ?
    • உயர்ந்த செயற்திறனும் , உச்சபட்ச உற்பத்தித்திறனும் , அளப்பரிய ஆற்றலும் கொண்ட ஒரு நபராக ஆவதை நோக்கிய உங்கள் பயணத்தின் வேகத்தை அதிகரித்துக் கொள்வது எப்படி ? .
    இந்நூலை கவனமாகப் படித்து இதில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் , உங்கள் நேரமும் உங்கள் வாழ்க்கையும் உங்கள் வசமாகும் என்பது உறுதி !
  • SAVE 7%
    Add to cart

    கௌரவன் / Kauravan

    499 464
    நாமறிந்த மகாபாரதம் , குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை . எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன் ‘ துரியோதனன் .
    பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .
    இது ஒரு புறம் இருக்க –
    தென்னக ராஜ்யங்களின் கூட்டமைப்பின் ராஜகுருவான பரசுராமன் , குரு வம்சத்தை வீழ்த்தி ஒட்டுமொத்த பரதகண்டத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் .
    மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஏகலைவன் , சமுதாயத்தில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பை மீறி ஒரு போர் வீரனாக ஆகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான் ,
    நாகர்களின் தீவிரவாதத் தலைவனான தட்சகன் , கீழ்ச்சாதியினரையும் தீண்டத்தகாதவர்களையும் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு , ஒரு புரட்சியைத் தூண்டத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான் .
    சாதிப் பிரிவினை நம் சமுதாயத்திற்கு இன்றியமையாதது , அந்தக் கட்டமைப்புச் சீர்குலையும்போது , ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீரழிந்துவிடும் என்று வலியுறுத்தி , அதற்குப் புனித நூல்களை மேற்கோள் காட்டும் தெளமியன் போன்ற பிராமணர்கள் தங்களை அரசர்களின் ஆலோசகர்களாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்
    இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் , தன் மனசாட்சிப்படி நடக்க முயலும் பட்டத்து இளவரசனான துரியோதனன் தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது ,
    அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்நிய நாட்டு இளவரசன் . அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன …
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கௌரவன் 2 / Gowravan 2

    599 557
    நாமறிந்த போரில் மகாபாரதம் , குருச்சேத்திரப் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை எல்லா நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த வழிகளிலும் தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் கௌரவன் ‘ துரியோதனன் , .
    பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பானரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்திய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .
    இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் . தன் மனசாட்சிப்படி நடக்க முயனும் பட்டத்து இளவரசனான துரியோதனன்தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் தன் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தன்னப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது .
    அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்திய நாட்டு இளவரசனான சகுனி . அவன் உருட்டிய பகடைகள் எப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்நூலின் முதல் பாகத்தில் நாம் பார்த்தோம் .
    இந்த இரண்டாம் பாகத்தில் :
    போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன .
    தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன .
    அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர் .
    பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவி கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .
    பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகன்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர் .
    தன் பங்குக்கு ஓர் ‘ அவதாரமும் ‘ சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது .
    இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும் , கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும் , உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் .
  • SAVE 7%
    Add to cart

    சக்தி / The Power

    599 557
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு / Sapiens-A Brief History Of Humankind

    499 464
    இது மனிதனின் கதை . வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன் , உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது . நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும் , சுவாரசியமாகவும் , விறுவிறுப்பாகவும் , செறிவாகவும் , சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா ? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி .
    நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன . அவற்றில் சில :
    மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான் .
    வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான் .
    தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை .
    வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே ? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர் .
    அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள் !
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தனிமனித வளர்ச்சி விதிகள் 15 / The Invaluable Laws of Growth

    250 233
    உங்களுடைய முழு ஆற்றலையும் அடையத் தேவையான முழுமையான கையேடு ! ‘
    தனிநபர் வளர்ச்சி விதிகள் 15 ‘ என்ற இந்நூல் , ஜான் மேக்ஸ்வெல்லின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று . ஒரு தனிநபர் என்ற முறையில் நீங்கள் எவ்வாறு மகத்தான வளர்ச்சியை அடைவது என்பதை மேக்ஸ்வெல் இந்நூலின் மூலம் கற்றுக் கொடுக்கிறார் .
    அவர் இந்நூலில் வலியுறுத்துகின்ற விஷயங்கள் பின்வருமாறு : .
    நீங்கள் எவ்வளவு தனித்துவமானவரோ , உங்கள் வளர்ச்சி அவ்வளவு தனித்துவமானது .
    நீங்கள் உங்கள் குறிக்கோளைக் கண்டுபிடிக்க விரும்பினால் , சுயவிழிப்புணர்வில் நீங்கள் வளர்ச்சியுற வேண்டும் .
    ஒரு சிறந்த மனிதராக ஆவதற்கு , நீங்கள் உங்கள் நடத்தையில் வளர்ச்சியடைய வேண்டும் . .
    ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைவராகவோ அல்லது பெற்றோராகவோ ஆவதற்கு , உங்கள் உறவுகளில் நீங்கள் வளர வேண்டும் .
    உங்களுடைய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு , பணம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய அறிவில் நீங்கள் வளர்ச்சி வேண்டும் .
    உங்கள் ஆன்மாவிற்குச் செறிவூட்டுவதற்கு , ஆன்மீகரீதியாக நீங்கள் வளர வேண்டும் .
    வளர்ச்சி உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது . நீங்கள் தினமும் செய்கின்ற ஏதோ ஒன்றை நீங்கள் என்றைக்கு மாற்றுகிறீர்களோ , அன்றுதான் உங்கள் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தலைமைத்துவம் / Leadership

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நேர நிர்வாகம் / Time Management

    150 140