ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பாவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலில் அலசியுள்ளார் .
நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலில் ஆரியர்கள் இந்தியா வந்தபிறகு ரிக் வேதம் பிறந்தது . ஆரியர்கள் மதுவருந்தியது , மாமிசம் உண்டது . அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன . ஆரியர்களின் குல கோத்திரங்கள் , அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை , கல்வி கற்கும் முறை , நோய் தீர்க்கும் மருத்துவம் , ஆடை அணிகலன்கள் , பொழுதுபோக்கு , இசை , நடனம் , நாட்டியம் , சூதாட்டம் , வணங்கிய தெய்வம் , அவர்களின் வேளாண்மை , வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன .
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர் . கல்விக்கடல் , வற்றாத அறிவு ஊற்று . நுண்மான் நுழைபுலம் மிக்கவர் . ஐம்பது ஆண்டுகள் , நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர் . அவர் எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு , அரையாண்டு , காலாண்டு , மாத – வார – நாளிதழ்கள் பல வெளிவந்தன .
மார்க்சிய – லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று , இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும் , மெய்ப் பொருள் வகைகளையும் , சமயங்களையும் குறித்து நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம் , உண்மை , தலைவிதி தத்துவம் , மூட நம்பிக்கைகள் , பூதங்களும் இயக்கங்களும் , குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறது .