இந்த நூல் தருக்கமுறையில் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறது . இதிலே காலங்களின் இயங்குநிலைகளோடு கூடிய வரலாறு இருக்கிறது . மன்னர் களின் , பாளையங்களின் வாரிசுரிமைகளும் அதிகாரப்பகிர்வுகளோடும் கூடிய அரசியல் இருக்கிறது . சாதிகளாகவும் , வலங்கை – இடங்கையாகவும் , வேளாண் குழுக்களாகவும் , வாணிகக் குழுக்களாகவும் , சேவைக் குழுக்களாகவும் கட்டமைந்து கிடந்த சமூக அமைப்பு இருக்கிறது . குடும்பம் , பெண் , நிலப்பாகுபாடு , கல்வி , கலை முதலியவை உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் இருக்கிறது . நிலமானியங்கள் , பண்ணை உற்பத்திமுறை , கைத்தொழில் , வாணிகம் உள்ளிட்ட பொருளாதாரம் இருக்கிறது . மொத்தத்தில் , தமிழகத்தில் நாயக்கர்காலத்தின் பன்முகப்பட்ட பரிமாணங்களைக் காணுகிறோம் . நுணுக்கமாக விவரங்களும் , இயங்குநிலைகளோடு கூடிய நிகழ்வுகளும் அவற்றின் எதிர்வினைகளும் , வெறுமனே நீள்படுக்கையாக அல்லாமல் விமரிசனத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றன .
இந்த ஆராய்ச்சிக்கு , ஏற்கெனவே சொன்னதுபோல , இலக்கியங்களே மூலாதாரம் . பின்னிடைக்காலத்து மொழியையும் அதன் பொருண்மையையும் உள்நுழைந்து வாசிப்புச் செய்தால் தெரியும் , இது எவ்வளவு சிரமமானது என்று . இந்த மொழிக்கிடங்குக்குள் ஆழந்தெரியாமல் காலை விடக் கூடாதுதான் . ஆனால் முத்துக்களும் பவழங்களும் ஆழத்துக்குள் தானே படிந்து கிடக்கின்றன . ஆழங்கால்படுவது ஆராய்ச்சியின் அறைகூவல் , அதனை அ . ராமசாமி ஏற்றுக்கொண்டு , இந்த இலக்கியங்களில் மூச்சடக்கி மூழ்கி முத்துக்களை வாரியெடுத்துத் தந்திருக்கிறார் .
டி.என்.ஜா என்று சுருக்கமாக அழைக்கப்படும் துவிஜேந்திர நாராயண் ஜா அவர்கள் 1957 ஆம் ஆண்டு கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலைப்பட்டமும் பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் ( 1959 ) , முனைவர் பட்டமும் ( 1964 ) பெற்றார் . 1975 வரை இதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் .
இந்தியாவிலும் , வெளிநாட்டிலும் பல பல்கலைக்கழகங்களிலும் , கல்வி மையங்களிலும் உரையாற்றியிருக்கிறார் . 1984-85இல் பல்கலைக்கழக மானியக் குழுவில் வரலாற்றுத் துறையில் தேசிய விரிவுரையாளராகப் பணியாற்றினார் . பின்னர் தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார் . இவர் எழுதியுள்ள நூல்கள் பின்வருமாறு : Revenue System in Post – Maurya and Gupta Times ( கல்கத்தா , 1967 ) Ancient India : An Introductory Outline ( தில்லி , 1977 ) , Studies in Early Indian Economic History ( தில்லி , 1980 ) , Economy and Society in Early India : Issues and Paradigms ( தில்லி , 1993 ) Ancient India in Historical Outline ( தில்லி , 1998 ) . கடைசியாக அவர் எழுதிய Holy Cow தில்லி 2001 ) என்ற நூலுக்கு அய்தராபாத் நீதிமன்றம் தடை விதித்தது . இதே நூலை The Myth of the Holy Cow என்ற பெயரில் வெர்ஸோ ( லண்டன் நியூயார்க் ) பதிப்பகம் வெளியிட்டது
புனிதப்பசு என்ற நூல் வெளியிடப்பட்டபோது இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன . அந்தளவிற்கு வகுப்புவாதச் சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர் இவர் .
திரு . ஆர்.எஸ் . சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் . இதன் முன்னர் டோரன்டோ மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்றுப் பாடம் போதித்துப் பெரும் புகழ்பெற்றவர் . இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த நற்பெருமையும் இவரைச் சேரும் . ” பண்டைக்கால இந்தியா ” என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல் . பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால் , ஆன்றோர்களால் , சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977 இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது . எனினும் தவறு உணரப்பட்டு , 1980 ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது .