Showing 1–16 of 106 results
-
Add to cart
இந்திய வரலாறு / India Varalaaru
₹660₹614இந்தியக் குடிமக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வரலாறு . இது குறைந்தது 30 நூற்றாண்டுக்கால அளவினதாய் வரலாறு , இந்நூல் சுருக்கமாக , ஆனால் எந்த முக்கியமான செய்திகளையும் விடாமல் எழுதப்பெற்றுள்ளது . இதில் 14 அரசகுல முறைப் பட்டியல்கள் , 26 வரைபடங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஏறத்தாழ 1950 வரையுள்ள முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன . இந்நூலின் அருமையை உணர்ந்து ஆசிரியர்களும் , மாணவர்களும் , பொதுமக்களும் விரும்பிப் படித்து மிகுந்த ஆதரவு தருவார்கள் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும் .
-
Read more
இன்றைய இந்தியா / Indraiya India
₹700₹651ஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத் . இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் . எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர் . இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது .இந்த நூலுக்குப் பலவகைச் சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு . ஒன்று இந்த நூல் அக்காலத்தில் ஒவ்வொரு போராளி கையிலும் திகழ்ந்தது . இந்தியா அல்லாத வேறு பல நாடுகளில் பணியாற்றிவந்த விடுதலை இயக்கங்களுக்கும் இது ஓரளவு வழிகாட்டி நூலாகவும் இருந்தது . மற்றொன்று இந்திய வரலாற்றை மக்கள் வரலாறாகக் காணவேண்டும் என்னும் கோட்பாட்டுக்கு அடிக்கல் நாட்டியது . நாடு விடுதலை பெற்ற அறுபதாண்டுகளில் பொருளாதார , சமூக ஆய்வு நூல்கள் எண்ணிறந்தவை வெளிவந்துள்ளன . அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக , வழிகாட்டியாக விளங்குவது இந்நூல் .